டி. ஏ. வி. நாதன்
டி. ஏ. வி. நாதன் (T. A. V. Nathan) தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில நாளிதழான ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டி. ஏ. வி. நாதன், விடுதலை நாளிதழின் முதல் ஆசிரியராகவும் பணியாற்றினார். தந்தை பெரியார் 1940-1941 இல் இந்தியாவின் வடமாநிலங்களுக்குச் சென்ற போது உடன் சென்றவர். 1962 சனவரியில் மறைந்தார்.