டி. கே. அலெக்ஸ்
தெக்கத்தில் கோச்சாண்டி அலெக்சு (Thekkethil Kochandy Alex) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகவும், விண்வெளி ஆணையத்தில் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.[1] முதல் இந்திய செயற்கைக்கோளான ஆர்யபட்டாவில் தொடங்கி இவர் மின்-ஒளியியல் அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அனைத்து இந்திய செயற்கைக்கோள்களிலும் உள்ள உணரி அமைப்புகளுக்கு பொறுப்பு வகித்தார். டி. கே. அலெக்சு தலைமையில் மின்-ஒளியியல் அமைப்பு ஆய்வகம் நிறுவப்பட்டது. 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இவர் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கு 2011 ஆம் ஆண்டில் முனைவர் விக்ரம் சாராபாய் சிறப்புப் பேராசிரியர் தகுதி வழங்கப்பட்டது.[2]
டி. கே. அலெக்ஸ் | |
---|---|
வாழிடம் | பெங்களூர், கர்நாடகம் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | மின் பொறியியல் மற்றும் விண்வெளிப் பொறியியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | கேரள பல்கலைக்கழகம் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை இந்திய அறிவியல் கழகம் |
விருதுகள் | இந்திய விண்வெளிப் பயணக் கழக விருது (2002) |
இவரது சாதனைகளைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ISRO (30 May 2008). "Press Release". Indian Space Research Organisation. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
- ↑ Astronautical Society of India, 2002 ASI Award winner Biography
- ↑ PIB (26 January 2007). "Padma Awards for 2007 announced". Press Information Bureau. Government of India. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.