டி. கே. பசவேஸ்வர்
துண்டூர் கலமேஷ்வர் பசவேஷ்வர் (Dundur Kalameshwar Basaveshwar) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்கவாதி ஆவார். இவர் [1] 1898 ஆம் ஆண்டில் பிறந்தார். முதலாம் உலகப் போரின்போது அரசரால் ஆணையிடப்பட்ட இந்திய அதிகாரியாகப் பணியாற்றினார்.[1] 1932 ஆம் ஆண்டில் தொழிற்சங்க இயக்கத்தில் சேர்ந்தார். [1] இவர் வட்ட அளவிலான கூட்டுறவு மேற்பார்வையிடல் ஒன்றியத்தின் தலைவராகவும், தொழில்துறை சங்கம் மற்றும் பிற குழுக்களின் தலைவராகவும் பணியாற்றினார். [1] இவர் 1940-1941 சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்தார் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சேர்ந்தார். [1] 1946 தேர்தலில் பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1947 ஆம் ஆண்டு தார்வார் மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல் ஊர்க்காவல் படையினர் அமைப்பின் மாவட்டத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1][2]1952 தேர்தலில் ஹூப்ளி தொகுதியின் இட ஒதுக்கீடு செய்யப்படாத இடத்துக்கு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நின்று பம்பாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பசவேஷ்வர் ஸ்ரீ அரவிந்தரின் சீடர் ஆவார். [1]
பசவேசுவர் சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிவதற்குள் மரணமடைந்ததால், இடைத்தேர்தலில் இவரது இடத்தை நிரப்ப சுயேச்சை வேட்பாளர் கே. ஏ. சித்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Homi Jehangirji H. Taleyarkhan (1953). Bombay Legislature Directory. Bombay Legislature Congress Party. p. 21.
- ↑ India. Ministry of Information and Broadcasting (1953). India, a Reference Annual. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 108.
- ↑ India. Ministry of Information and Broadcasting (1953). India, a Reference Annual. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 19.