ஊர்க்காவல் படை (இந்தியா)

இந்தியக் காவல்துறையின் துணைப்படை

ஊர் காவல் படை (Indian Home Guard) இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாகும்.[1] இந்திய - சீனா போருக்குப் பின்னர் இந்தியக் காவல்துறைக்கு உதவிட 1962-இல் ஊர் காவல் படை அமைப்பு நிறுவப்பட்டது. 18 முதல் 50 வயது உள்ள தன்னார்வம் கொண்ட அனைத்து தரப்பு இளைஞர்களை ஊர்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஊர் காவல் படையில் குறைந்தபட்ச சேவைக்காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.[2]இந்தியாவின் 25 மாநிலங்களில் ஊர் காவல் படையில் 5,73,793 நபர்கள் உள்ளனர்.

தீயணைப்பு பயிற்சியில் ஊர் காவல் படையினர், 1970
தீயணைப்பு பயிற்சியில் ஊர் காவல் படையினர், 1970
முதலதவி பயிற்சி பெறும் ஊர் காவல் படையினர், 1970

பணிகள்

தொகு
  • உள்நாட்டு பாதுகாப்பிற்கு காவல்துறையுடன் உதவுவது.
  • போர்க் காலங்களில் விமான குண்டு வீச்சிலிருந்து தற்காத்து கொள்வதற்கு மக்களை பயிற்றுவிப்பது மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காக்க உதவுதல்.
  • நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நேரடியாகவும், மறைமுகவும் இக்கட்டான நிலைகளில் அவசரப்படையாகவும் செயல்படுதல்.
  • அவசர காலங்களில் மோட்டார் வாகனங்கள் ஓட்டுதல், தீயணைப்பு பணி மேற்கொள்தல், மருத்துவ செவிலியர் பணிகள், முதலுதவி, தகவல் தொடர்பு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.

தமிழ்நாட்டில் ஊர்காவல் படை

தொகு

தமிழ்நாட்டில் ஊர் காவல் படை 1963-இல் துவக்கப்பட்டது. [3][4][5]தற்போது ஊர்காவல் படையினரின் நாள் ஊதியம் 152 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையினருக்கு ஆண்டுக்கு 200 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் மாநகர ஆயுதப்படை, அதிகாரிகளின் வாகனங்களை இயக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் வாரண்டுகளை வழங்க முடியாமல் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த குறைகளையும் தற்காலிகமாக தீர்வு காணும் வகையில், போலீசார் மேற்கொள்ளும் பணிகளை, ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Defence & Paramilitary Personnel". National Portal of India. Archived from the original on 8 January 2011. பார்க்கப்பட்ட நாள் 18 March 2012.
  2. "Home Guards". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 18 March 2012.
  3. Formation of the Home Guards in the state
  4. The Tamil Nadu Home Guard Act (Iii of 1963) Complete Act
  5. TAMIL NADU HOME GUARDS RULES 1963
  6. ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணி
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Home Guards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்க்காவல்_படை_(இந்தியா)&oldid=3952258" இலிருந்து மீள்விக்கப்பட்டது