துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்

(டி. ஜி. எஸ். தினகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரண்டை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார். ஜெபகோபுரம் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார்.

டி.ஜி.எ‌ஸ்.தி‌னகர‌ன்
பிறப்பு (1935-07-01)சூலை 1, 1935
இந்தியா சுரண்டை, தமிழ்நாடு
இறப்பு பெப்ரவரி 20, 2008(2008-02-20) (அகவை 72)
சென்னை
பணி கிறித்தவ மறைபரப்புனர்
துணை ஸ்டெல்லா தினகரன்

குழந்தைப்பருவம்

தொகு

துரைசாமி, எப்சிபா தம்பதிகளுக்கு ஒரே மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தினகரன் பிறந்தார். இவரது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர் ஆவர், தாய் எப்சிபா வீட்டுமனைவியாக இருந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தாயார் குணப்படுத்தப்பட முடியாத நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இயேசுவை ஏற்றல்

தொகு

வாலிபராயிருந்தபோது வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் காரணமாக 1955 பெப்ரவரி 11 அன்று தற்கொலை எண்ணத்துடன் தொடருந்துப் பாதைக்கு சென்றார். செல்லும் வழியில் காவல்துறையில் வேலை செய்த தனது சித்தப்பாவை சந்தித்தார். கடவுள் பக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், தினகரனுடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார்.

இறப்பு

தொகு

நீண்ட நேரம் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டவர் தினகரன். இதனால் இவரது மூட்டுகள் பாதிக்கப்பட்டன. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சளித் தொல்லை மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2008 பெப்ரவரி தொடக்கத்தில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் தினகரனுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. சிகிச்சை பலனின்றி 20.2.2008 அன்று காலை 6 மணிக்கு தனது 73வது அகவையில் தினகரன் மரணம் அடைந்தார்.

வெளி இணைப்புகள்

தொகு