டி. பி. தர்

டி. பி. தர் என்ற துர்க பிரசாத் தர் (Durga Prasad Dhar, 10,மே 1918--1975) என்பவர் காசுமீர அரசியல்வாதி, சோவியத் யூனியனின் இந்தியத் தூதர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தவர் ஆவார். 1971 இல் இந்தியா,பாகிஸ்தான் போர் மூண்டபோதும், வங்க தேசம் உருவானபோதும் டி.பி.தர் முக்கியப் பங்காற்றினார்.[1]


அரசியல் பணிகள்தொகு

  • 1946 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார்.
  • 1948இல் காசுமீரத்தில் சேக் அப்துல்லா தலைமையில் உள்துறைச் செயலராகவும், உள்துறை துணை அமைச்சராகவும் இருந்தார்.
  • 1951-57 காலகட்டத்தில் காசுமீர மாநில சட்ட வடிவமைப்புக் குழுவில் இடம் பெற்றார்.
  • 1957-67 இல் காசுமீர மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
  • 1972 இல் இந்திய மாநில அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுவணரசு திட்ட அமைச்சராகவும் ஆனார்.

தூதுவராகதொகு

  • ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தில் 1949இல் இந்தியத் தூதுக் குழுவில் இடம் பெற்றார்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுக் குழு பாரிசில் 1952 இல் கூடியபோது இந்தியத் தூதுக் குழுவில் கலந்து கொண்டார்.
  • சோவியத் யூனியன் இந்தியத் துதராக 1969 -71 ஆண்டுகளிலும் 1975 முதல் இறக்கும் வரையிலும் பதவி வகித்தார்.
  • 1971 இல் இந்தியா சோவியத் யூனியன் நட்பு கூட்டுறவு ஒப்பந்தம் உருவாக உறுதுணையாக இருந்தார்.

பெருமைகள்தொகு

மாசுகோவில் இவரது நினைவைக் கூரும் வகையில் இந்தியத் தூதரகத்தில் டி .பி தர் பெயரில் ஒரு கூடம் உள்ளது. வங்கதேசம் உருவாக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டியதைப் போற்றும் வகையில் வங்கத்தேச அரசு 2012 ஆம் ஆண்டில் இவரைக் கவுரவித்தது. இவ்விருதினை மகன் விசய் தர் பெற்றுக்கொண்டார்.[2]

சான்றாவணம்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.thehindu.com/news/international/dp-dhar-honoured-in-bangladesh/article3251255.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._தர்&oldid=3556583" இருந்து மீள்விக்கப்பட்டது