டீசல் பொறி
டீசல் பொறி எனப்படுவது ஒரு வகையான உள் எரி பொறி ஆகும். இது அமுக்குவதால் உண்டாகும் வெப்பத்தை வைத்து எரிப்பு அறையிலுள்ள எரிபொருளை எரிய வைக்கிறது. எரிம-வளிமக் கலவையை எரிய வைக்கத் தீப்பொறி பயனாகும் எரியூட்டு-பொறியிலிருந்து (spark-ignition engine) இது மாறுபட்டது. இப்பொறி டீசல் என்பவரால் 1893 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மேலும் இதன் பற்றிக்கொள்ளும் வெப்பநிலை பெட்ரோலை ஒப்பிடும்போது குறைவு. அதனால் இதில் எரியூட்டு (Sprak) என்ற சாதனம் தேவையில்லை.[1][2][3]
டீசல் பொறி அதன் உயர் அமுக்கு விகிதம் காரணமாக உள் அல்லது வெளி எரி பொறியினை விட உயர் வெப்பப் பயனுறுதியைக் கொண்டுள்ளது, குறைந்த வேகமுடைய டீசல் பொறிகள் 50% இற்கும் அதிக பயனுறுதியைக் கொண்டுள்ளது.
டீசல் பொறிகள் இரண்டு மற்றும் நான்கு ஸ்ட்ரோக் வகைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் நிலையான நீராவி இயந்திரங்களிற்கான திறமிக்க மாற்றுதலாக பயன்படுத்தப்பட்டன. 1910 முதல் நீர்மூழ்கிகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் நகரூர்திகள், டிரக்குகள், கனரக கருவிகள் மாற்றும் மின் பிறப்பாக்கும் நிலையங்களில் பயனுக்கு வந்தன. 1930களில் மெதுவாக ஒரு சில தானுந்துகளில் பாவனைக்கு வந்தன. 1970லிருந்து ஐக்கிய அமெரிக்காவில் சாலையில் செல்கின்ற மற்றும் சாலையில் செல்லாத டீசல் பொறி வண்டிகளின் பயன்பாடு அதிகரித்தன. 2007 இன் படி ஐரோப்பாவில் விற்பனையாகும் புதிய கார்களில் 50% டீசல் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramey, Jay (April 13, 2021), "10 Diesel Cars That Time Forgot", Autoweek, Hearst Autos, Inc., archived from the original on 2022-12-06
- ↑ "Critical evaluation of the European diesel car boom - global comparison, environmental effects and various national strategies," 2013, Environmental Sciences Europe, volume 25, Article number: 15, retrieved December 5, 2022
- ↑ Huffman, John Pearley: "Every New 2021 Diesel for Sale in the U.S. Today," March 6, 2021, Car and Driver, retrieved December 5, 2022