டுரூப்பல் (Drupal (pronounced /ˈdruːpəl/) என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது பி.எச்.பி இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை டூரூப்பல் கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம். ஜூம்லாவை விட அதிக செயற்கூறுகளை ட்ரூபால் கொண்டிருக்கிறது.

Drupal 7

ட்ரூபாலை உருவாக்கியவர் Dries Buytaert என்பவராவார். தற்போது ட்ரூபால் கூட்டமைப்பு உதவியுடன் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள், எண்ணூற்றுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வ மென்பொருள் நிரலாக்கவியலாளர்கள் மூலம் ட்ரூபால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

கருவகம், தொகுதிகள், வடிவ வார்ப்புருக்கள் தொகு

டுரூப்பலை கருவகம் (core), தொகுதிகள் (modules), வடிவ வார்ப்புருக்கள் (themes) ஆகிய பகுதிகளாகப் பிரிக்கலாம். கருவகம் வலைத்தளம் அமைக்கத் தேவையான அடிப்படைக் கூறுகளைக் கொண்டிக்கிறது. தொகுதிகள் (modules) குறிப்பிட்ட தேவைக்கேற்ப பயன்படுத்த வல்ல மேலதிக நிரல் கூறுகளைக் கொண்டிருக்கிறது. வடிவ வாப்புருக்கள் ஒரு தளத்தின் தோற்றத்தை கட்டமைக்கத் தேவையான காட்சிப்படுத்தல் கூறுகளைக் கொண்டிருக்கிறது.

தன்மொழியாக்கம் தொகு

டுரூப்பல் தன்மொழியாக்கம் செய்ய பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. பன்மொழி வலைத்தளங்கை உருவாக்கவும் டுரூப்பல் உதவுகிறது. இந்த வசதி வெளியீடு 7 இன் மூலம் மேலும் விருத்தி செய்யப்பட்டும், அதன் கருவக கூறுகளின் ஒன்றாக அமையவுள்ளது.

வெளியீடு 6 இல் i18n என்ற தொகுதி அவசியமாகும். அத்தோடு பன்மொழி வலைத்தளங்களை மேலாண்மை செய்ய மொழிபெயர்ப்பு மேலாண்மை என்ற தொகுதியும் தேவையாகும். இந்த தொகுதிகளை நிறுவி, ஏதுவாக்க வேண்டும். பின்னர் மொழி தொடர்பான site settings மாற்ற வேண்டும். In each content types, enable "Multilingual support", and set the Multilanguage options.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுரூப்பல்&oldid=3368833" இலிருந்து மீள்விக்கப்பட்டது