டுரோக்கோபோர்

டுரோக்கோபோர்((/ˈtrkəˌfɔːr, ˈtrɒ-, -k-/;[1][2] (டுரோகோபோர் (Trochophore) என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது குற்றிலைகள் உடைய மிதவைவாழி கடல் குடம்பி (இளம் உயிரிகள்) களாகும்.

டுரோக்கோபோரின் உடற்கூறியல்
A - எபிஸ்பியர்
B - ஹைப்போஸ்பியர்
1 - நரம்புச் செல்திரள்
2 - தலை உச்சிக்கொத்து
3 - புரோட்டோட்டுருக் 4 - மெட்டாட்டுருக் 5 - நெஃப்ரிடியம் 6 - மலவாய் வட்டம் 7 - புரோட்டோ நெஃப்ரிடியா 8 - இரைப்பை குடல் 9 - வாய்க்குழித் திறப்பு 10 - பிளாஸ்டோகோலே

இவற்றின் மேற்பரப்பில் உள்ள குற்றிலைகளை விரைவாக நகர்த்துவதன் மூலம், நீர் அசைவு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் இயக்கத்தின் திசையைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இந்த இளம் உயிரிகள் தங்கள் உணவை மிக எளிதாகப் பிடிக்கின்றன.

அமைவு

தொகு

டுரோகோசூவா உயிரினக் கிளையான, எண்டோபுரொக்ட்சு, மெல்லுடலிகள், வளைதசைப் புழுக்கள், எச்சியுரா, சிபுங்குலா, மற்றும் நெமர்டியாக்களில் இந்த மிதவை உயிரி காணப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து லோபோட்ரோகோசோவாவின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இந்த குழுவின் பொதுவான மூதாதையரின் வாழ்க்கைச் சுழற்சியில் டுரோக்கோபோர் இளம் உயிரிகள் ஒருபகுதியாக இருந்திருக்கலாம்.

சொற்பிறப்பியல்

தொகு

டுரோக்கோபோர் என்ற சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லான τροχός (trókhos) "சக்கர" என்ற அர்த்தத்திலும் φέρω (phérō) - அல்லது φορέω (phoréō) - கொண்டிருக்க, அதாவது, இந்த இளம் உயிரியில் சக்கரம் போன்ற குற்றிலை பட்டைகள் கொண்டிருப்பதால் வந்தது.

உணவுப் பழக்கம்

தொகு

டுரோக்கோபோர் இளம் உயிரிகள் பெரும்பாலும் மிதவைவாழி ஊட்டம் கொண்டவை ஆகும்; அதாவது, இவை மற்ற மிதவைவாழிகளை உணவாக உட்கொள்கின்றன.

வாழ்க்கைச் சுழற்சி

தொகு
 
வளைதசைப்புழு, பொமடோசெரோஸ் லாமர்கி (குடும்ப செர்பூலிடே) டுரோக்கோபோரின் நிலைகள் (பிரகாசமான-புல நுண்ணோக்கி படம்) [3]

வளைதசைப்புழுக்களில் பொமடோசெரோஸ் லாமர்கி (குடும்ப செர்பூலிடே) வாழ்க்கைச் சுழற்சியில் பல்வேறு டுரோக்கோபோர் நிலைகள் உள்ளன (படம்: Dமுதல் F வரை):D - ஆரம்ப நிலைE-முழு நிலைF-தாமத நிலை

G-மெட்டாடுரோக்கோபோர்

 
கடல் காஸ்ட்ரோபாட் ஹாலியோடிஸ் அசினினாவின் டுரோக்கோபோர் (9 மணி நேரமுடைய)[4]
 
பாலிப்ளாக்கோபோராவின் ஒன்டோஜெனி: முதல் படம் டுரோக்கோபோர்; இரண்டாவது நிலையில் உருமாற்றத்தினை காட்டுகிறது, மூன்றாவது படம்: இளம்நிலை (வருடி எலக்ட்ரான் நுண்ணோக்கிப் படம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Trochophore". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  2. "Trochophore". Dictionary.com Unabridged. Random House. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  3. McDougall, Carmel; Chen, Wei-Chung; Shimeld, Sebastian M.; Ferrier, David E. K. (2006). "The development of the larval nervous system, musculature and ciliary bands of Pomatoceros lamarckii (Annelida): heterochrony in polychaetes.". Frontiers in Zoology 3 (1): 16. doi:10.1186/1742-9994-3-16. பப்மெட்:17032451. 
  4. Jackson, Daniel J.; Wörheide, Gert; Degnan, Bernard M. (2007). "Dynamic expression of ancient and novel molluscan shell genes during ecological transitions". BMC Evolutionary Biology 7 (1): 160. doi:10.1186/1471-2148-7-160. பப்மெட்:17845714. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுரோக்கோபோர்&oldid=3087460" இலிருந்து மீள்விக்கப்பட்டது