டுரோய்னா சண்டை
டுரோய்னா சண்டை (Battle of Troina) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சிசிலியில் நடைபெற்ற ஒரு சண்டை. சிசிலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் அமெரிக்கப் படைகள் ஜெர்மானியப் படைகளை முறியடித்து டுரோய்னா நகரைக் கைப்பற்றின. ஜூலை 31 - ஆகஸ்ட் 6, 1943 காலகட்டத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் அமெரிக்க 7வது ஆர்மியின் படைப்பிரிவுகள் எட்னா அரண்கோட்டின் ஒரு பகுதியான டுரோய்னா நகர் மற்றும் அதை சுற்றுப்புறங்களைத் தாக்கியது. கரடுமுரடணான நிலவியல் அமைப்பும், பலமான பாதுகாவல் நிலைகளும் அச்சுப் படைகளுக்கு சாதகமாக இருந்தன. ஏழு நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின் டுரோய்னா நகரம் அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டது
டுரோய்னா சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
சிசிலியப் படையெடுப்பின் பகுதி | |||||||
இரண்டாம் உலகப் போரின் போது டுரோய்னா நகரம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜார்ஜ் பேட்டன் |