டூம்போசு சண்டை
டூம்போசு சண்டை (Battle of Dombås) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நிகழ்ந்த ஒரு சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்கள் நார்வேயின் முக்கிய தொடருந்து சந்திப்பான டூம்போசைக் கைப்பற்றி ஐந்து நாட்களுக்கு தொடருந்து போக்குவரத்தைத் தடைசெய்தனர்.
டூம்போசு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நார்வே போர்த்தொடரின் பகுதி | |||||||
டூம்ப்பொசில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய் யங்க்ர்சு-52 ரக வானூர்தி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நோர்வே | ஜெர்மனி | ||||||
இழப்புகள் | |||||||
20 பேர் உயிரழப்பு, 20 பேர் காயம் | 21 பேர் உயிரழப்பு, 20 பேர் காயம், 150 பேர் கைது செய்யப்பட்டனர் 8 யங்கர்சு-52 ரக வானுர்திகள் நாசம் |
ஏப்ரல் 9, 1940ல் நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. கடல்வழியாகவும், வான்வழியாகவும் நார்வே மீது ஜெர்மானியப் படைகள் தாக்குதல் தொடுத்தன. அதுவரை நடுநிலை நாடாக இருந்து வந்த நார்வே, இத்தாக்குதலை எதிர்கொள்ள நேச நாடுகளின் உதவியைக் கோரியது. அதே நாள் நேச நாட்டுப் படைகளும் நார்வேயில் தரையிறங்கின. இதன் ஒரு பகுதியாக ஒண்டலுசுனசு பகுதியில் பிரித்தானியப் படைகள் தரையிறங்கலாம் என்று ஜெர்மானியர்களுக்கு தகவல் கிடைத்தது. தெற்கு நார்வேயில் பல பகுதிகளை விரைவாகக் கைப்பற்றியிருந்த ஜெர்மானியத் தளபதிகள் வடக்கு நார்வேயில் நேச நாட்டுப் படைகள் நகர்த்தலை தடை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக டூம்போசு கிராமத்தையும் அங்கிருந்த தொடருந்து சந்திப்பையும் கைப்பற்றத் திட்டமிட்டனர்.
நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவுக்கு வடக்கு 90 மைல் தொலைவிலிருந்த டூம்போசு முக்கியத் தொடருந்து சந்திப்பாக இருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவோர் நார்வேயின் தொடருந்து சேவைகளில் பெரும் பகுதியினைக் கட்டுப்படுத்த முடியும். ஏப்ரல் 14 அன்று ஜெர்மானிய வான்குடை கம்பனி ஒன்று டூம்போசைக் கைப்பற்ற அனுப்பப்பட்டது. வான்வழியாகத் தரையிறங்கிய வான்குடை வீரர்கள. டூம்போசின் சாலை மற்றும் தொடருந்து சந்திப்புகளைக் கைப்பற்றி போக்குவரத்தைத் துண்டித்தனர். டூம்போசை மீட்க உடனடியாக நார்வீஜியப் படைப்பிரிவுகள் அனுப்பபட்டன. அடுத்த ஐந்து நாட்கள் டூம்போசைச் சுற்றி இரு படைகளும் தொடர்ச்சியாக மோதின. ஏப்ரல் 19ம் தேதி ஜெர்மானிய படைப்பிரிவு முறியடிக்கப்பட்டு சரணடைந்தது. தொடருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.