நடுநிலை நாடு

ஒரு குறிப்பிட்ட போரின் போது சண்டையிடும் இரு தரப்புகளுடன் சேராமல் நடுநிலை வகிப்பதாக அறிவிக்கும் நாடு நடுநிலை நாடு என்று வழங்கப்படும். சண்டையில் பங்குபெறா நாடுகளுக்கும் நடுநிலை நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. சண்டையிடுபவர்களுள் ஒரு தரப்பினை ஆதரித்தாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ போரில் ஈடுபடாத நாடு நடுநிலை நாடு கிடையாது.

மஞ்சள் - நடுநிலையென அறிவித்து கொண்டுள்ள நாடுகள்; பச்சை - நடுநிலை நாடுகள்; நீலம் - முன்னாள் நடுநிலை நாடுகள்

1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தின் ஐந்தாவது மற்றும் பதின்மூன்றாவது பிரிவுகளில் நடுநிலை வகிக்கும் நாடுகளின் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.[1][2] குறிப்பிட்ட போர்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நடுநிலை வகிக்க நிர்பந்திக்கப்படும் (பன்னாட்டு உடன்படிக்கைளின் மூலம்) நாடுகளும் உள்ளன. போர்க்காலத்தில் நடுநிலை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலை கோரும் நாடு, அதனை பிற நாடுகள் ஏற்கவேண்டுமெனில் பல குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். வெளியுறவுக் கொள்கைகளில் நடுநிலை, அணி சேராமை, ஆயுதமேந்திய நடுநிலை ஆகிய கொள்கைகள் வெவ்வேறாகக் கருதப்படுகின்றன. வெறும் நடுநிலை வகிக்கும் நாடு குறிப்பிட்ட சில காலத்துக்கோ, போர்களுக்கோ எத்தரப்பிலும் இணையாது. அணி சேரா நாடென்பது எந்த ராணுவ, அரசியல்க் கூட்டணிகளிலும் சேராமல் செயல்படும் நாடு. ஆயுதமேந்திய நடுநிலையென்பது, போருக்குத் தயாராகவும், தன்னை யாரேனும் தாக்கும் பட்சத்தில் நடுநிலையைக் கைவிடும் கொள்கையைக் கொண்டுள்ள நாட்டின் நிலையைக் குறிக்கும்.

தற்பொழுது நடுநிலை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிலை_நாடு&oldid=3940714" இலிருந்து மீள்விக்கப்பட்டது