டெட்ராலித்தியோமீத்தேன்
டெட்ராலித்தியோமீத்தேன் (Tetralithiomethane) என்பது CLi4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெட்ராலித்தியம் கார்பைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மிகவும் எளிதாக தாமே தீப்பற்றும் தன்மை கொண்ட சிவப்பு நிற திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது.[1] மீத்தேனின் இலித்தியம் ஒப்புமையாகவும் டெட்ராலித்தியோமீத்தேன் கருதப்படுகிறது..[2]
தயாரிப்பு
தொகுடெட்ராகிசு (குளோரோமெர்குரியோ)மீத்தேனை மூவிணைய-பியூட்டைல் லித்தியத்தைப் பயன்படுத்தி இலித்தியமேற்ற வினையின் மூலம் டெட்ராலித்தியோமீத்தேனனை தயாரிக்கமுடியும். 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் உலோகத்தையும் கார்பன் டெட்ராகுளோரைடையும் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[2][3]
- 8 Li + CCl4 → CLi4 + 4 LiCl
இருப்பினும், இந்த தயாரிப்பு முறையில் இலித்தியம் கார்பைடு போன்ற சில துணை தயாரிப்புகளும் நிககின்றன.
வினைகள்
தொகுடெட்ராலித்தியோமீத்தேன் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது தீவிரமான நீராற்பகுப்பு வினைக்கு உட்படுகிறது. மீத்தேன் வாயுவும் இலித்தியம் ஐதராக்சைடும் உருவாகின்றன.:[2]
- CLi4 + 4 H2O → CH4 + 4 LiOH
கனநீருடன் இது வினைபுரிகையில் மீத்தேனின் இருமடித்திரிபு வேதிப்பொருள் உருவாகிறது. டெட்ராலித்தியோமீத்தேனை 225 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் இலித்தியம் கார்பைடு மற்றும் இலித்தியமாக இது சிதைவடைகிறது.[1][2]
ஐதரசன் மூலக்கூறுகளுக்கான இலித்தியம் அயனிகளின் அறியப்பட்ட தொடர்பு காரணமாகவும் இதன் விளைவாக ஐதரசன் சேமிப்பகப் பொருட்களில் கிடைக்கும் சாத்தியமான பயன்பாடுகளாலும் டெட்ராலித்தியோமீத்தேனின் ஒருங்கிணைப்பு, ஐதரசன் தொடர்பு மற்றும் பல்வேறு கிராபீன் வகை மேற்பரப்புகளுடனான பிணைப்பு ஆகியவற்றிற்காக கணக்கீட்டு ரீதியாக ஆய்வு செய்யப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Lawrence A. Shimp; John A. Morrison; John A. Gurak; John W. Chinn Jr.; Richard J. Lagow (1981). "Observations on the nature of polylithium organic compounds and their rearrangements" (in en). Journal of the American Chemical Society 103 (19): 5951–5953. doi:10.1021/ja00409a074.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Adalbert Maercker; Manfred Theis (1984). "Tetralithiomethane" (in en). Angewandte Chemie International Edition 23 (12): 995–996. doi:10.1002/anie.198409951.
- ↑ C. Chung; R. J. Lagow (1972). "Reaction of lithium atoms at 800 °C with chlorocarbons; a new route to polylithium compounds" (in en). Journal of the Chemical Society, Chemical Communications (19): 1078–1079. doi:10.1039/C3972001078B.
- ↑ Er, Süleyman; de Wijs, Gilles A.; Brocks, Geert (2009). "Hydrogen Storage by Polylithiated Molecules and Nanostructures". J. Phys. Chem. C 113 (20): 8997–9002. doi:10.1021/jp901305h.