கார்பன் டெட்ராகுளோரைடு

கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) என்பது ஒரு கரிம சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CCl4. இது தீயணைப்பான்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. இது ஒரு நிறமற்ற, மணமுள்ள வாயு. இது சாதாரண வெப்பநிலையில் தீப்பற்றாது.

கார்பன் டெட்ராகுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பன் டெட்ராகுளோரைடு,டெட்ரா குளோரோ மீத்தேன்
வேறு பெயர்கள்
பென்சீன் ஃபார்ம், கார்பன் குளோரைடு, கார்பன் டெட் , ஃபிரியான்-10,மீத்தேன் டெட்ராகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வரலாறு தொகு

இச்சேர்மம் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஹென்றி விக்டர் ரெக்னால்ட்[1] என்பவரால் 1839-ல் கண்டறியப்பட்டது. இச்சேர்மம் கீழ்க்கண்ட வினையின் மூலம் உருவாகிறது.குளோரின் மற்றும் குளோரோஃபார்ம் இணைவதால் கார்பன் டெட்ராகுளோரைடு கிடைக்கிறது.

CH4 + 4 Cl2 → CCl4 + 4 HCl

அமைப்பு தொகு

இச்சேர்மம் நான்கு குளோரின் மூலக்கூறுகளும், ஒரு கார்பன் அணுவும் கொண்டுள்ளது. இது நாற்பிணைப்பு கொண்டுள்ளது. கார்பன் அணுவுடன், நான்கு குளோரின் மூலக்கூறுகளும் சகப்பிணைப்புக் கொண்டுள்ளது. இது மீத்தேன் மூலக்கூறு போன்ற அமைப்பில் இருப்பதால் இதற்கு "ஹாலோ மீத்தேன் [2]" என்று அழைக்கப்படுகிறது.

பண்புகள் தொகு

இது ஒரு முனைவற்ற மூலக்கூறு, இது முனைவற்ற மூலக்கூறுகளையும், எண்ணெய் பொருள்களையும், கொழுப்பு பொருள்களையும் கரைக்கும். இது குளோரின் மூலக்கூறுகளின் மணத்துடன் இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. V. Regnault (1839) "Sur les chlorures de carbone CCl et CCl2" (On the chlorides of carbon CCl and CCl2 ), Annales de Chimie et de Physique, vol. 70, pages 104-107. Reprinted in German as: V. Regnault (1839). "Ueber die Chlorverbindungen des Kohlenstoffs, C2Cl2 und CCl2". Annalen der Pharmacie 30 (3): 350–352. doi:10.1002/jlac.18390300310. 
  2. F. Brezina, J. Mollin, R. Pastorek, Z. Sindelar. Chemicke tabulky anorganickych sloucenin (Chemical tables of inorganic compounds). SNTL, 1986.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பன்_டெட்ராகுளோரைடு&oldid=2691056" இலிருந்து மீள்விக்கப்பட்டது