பொலோனியம் நாற்குளோரைடு
பொலோனியம் நாற்குளோரைடு (Polonium tetrachloride) என்பது PoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு [[கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இச்சேர்மம் அடர் மஞ்சள் நிறப் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இச்சேர்மம், செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போல 200° செ வெப்பநிலைக்கு மேல் பொலோனியம் இருகுளோரைடு மற்றும் அதிகளவு குளோரின் எனச் சிதைவடைகிறது[1].
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் நாற்குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
10026-02-5 | |
ChemSpider | 4896024? |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PoCl4 | |
வாய்ப்பாட்டு எடை | 350.79 கி/மோல் |
தோற்றம் | அடர் மஞ்சள்நிறப் படிகத் திண்மம் [1] |
உருகுநிலை | ≈ 300 °செ (in chlorine)[1] |
கொதிநிலை | 390 °C (734 °F; 663 K) |
கரையும், ஆனால் மிகமெதுவாக நீராற்பகுப்பு அடையும் | |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் அமிலத்தில் மற்றும் தையோனைல் குளோரைடில் நன்றாகக் கரையும், எத்தனால் மற்றும் அசெட்டோன் ஆகியவறில் மிதமாகக் கரையும்,நைட்ரிக் அமிலத்தில் சிதைவடையும். |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைப்பு
தொகுபொலோனியம் நாற்குளோரைடானது ஒற்றைச்சரிவு அல்லது முச்சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது.
தோற்றம்
தொகுஅறை வெப்பநிலையில் பொலோனியம் நாற்குளோரைடு அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனுடைய உருகுநிலையான 300° செல்சியசு வெப்பநிலையில் வைக்கோல் நிற மஞ்சளாகவும் கொதிநிலையான390° செல்சியசு வெப்பநிலையில் நல்ல சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. இச்சேர்மத்தின் ஆவியானது 500° செல்சியசு வெப்பநிலை வரை பழுப்பு நிறமாகவும் அதற்கு மேல் நீலம் மற்றும் பச்சை நிறத்திற்கும் மாறுகிறது.[1]
தயாரிப்பு
தொகுபொலோனியம் நாற்குளோரைடு பினவருமாறு தயாரிக்கப்படுகிறது.
- பொலோனியம் ஈராக்சைடுடன் உலர் ஐதரசன் குளோரைடு, வாயுநிலை தையோனைல் குளோரைடு அல்லது பாசுபரசு ஐங்குளோரைடு சேர்த்து வினைபடுவதால் ஆலசனேற்றம் வினை மூலமாக உண்டாகிறது.
- பொலோனியம் உலோகத்தை ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைப்பதால் உருவாகிறது.
- பொலோனியம் உலோகத்தை] கார்பன் நாற்குளோரைடு ஆவியில் உள்ள பொலோனியம் ஈராக்சைடை சூடுபடுத்துவதால் உருவாகிறது.
- பொலோனியம் உலோகத்தை உலர் குளோரின் ஆவியுடன் 200° செல்சியசு [[வெப்பநிலைக்குச் சூடாக்குவதால் உருவாகிறது.
பொலோனியம் வேதியியல்
தொகுஇரு மோல்கள் முப்பியூட்டைல் பாசுபேட்டுடன் பொலோனியம் நாற்குளோரைடு சேர்ந்தால் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போலவே பொலோனியம் நாற்குளோரைடும் PoCl−
5 and PoCl2−
6 ஆலசன் அணைவுச் சேர்மங்களாக உருவ்வகின்றது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5