செனான் இருகுளோரைடு

செனான் இருகுளோரைடு (Xenon dichloride) என்பது XeCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனானின் இச்சேர்மம் மட்டுமே நிலைப்புத் தன்மை உடைய செனானின் குளோரைடாக அறியப்பட்டுள்ளது. செனான் மற்றும் குளோரின் கலவையில் நுண்ணலை பாய்ச்சுதல் மூலமாகவும் தொடர்ந்து சுருக்கப் பொறி முறையிலும் செனான் இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. செனான்,குளோரின் மற்றும் போரான் முக்குளோரைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி . XeCl2•BCl3 தயாரிக்க முடியும் என்று கருதப்படுகிறது.ஆனால் விளை பொருளாக செனான் இருகுளோரைடு மட்டுமே உருவாகிறது.[1] செனான் இருகுளோரைடு ,செனான் அணு மற்றும் குளோரின் மூலக்கூறுகள் இரண்டாம் நிலை பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள உண்மைச் சேர்மமா என்பதில் இன்னும் ஐயம் உள்ளதாகக் கூறப்படுகிறது[2]

செனான் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
13780-38-6
பண்புகள்
XeCl2
வாய்ப்பாட்டு எடை 202.199 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செனான் ஒருகுளோரைடு , கிளர்வுற்ற ஈரணு மூலக்கூற்று சீரொளியாகப் பயன்படுத்தப்படுகிறது. Xe2Cl கிளர்வுற்ற நிலையிலேயே காணப்படுகிறது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. 张青莲 (November 1991). 《无机化学丛书》第一卷:稀有气体、氢、碱金属. Beijing: Science Press. pp. P72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-03-002238-6.
  2. Proserpio, Davide M.; Hoffmann, Roald; Janda, Kenneth C. (1991). "The xenon-chlorine conundrum: van der Waals complex or linear molecule?". Journal of the American Chemical Society 113 (19): 7184. doi:10.1021/ja00019a014. 
  3. Lorents, D. C.; D. L. Huestis; M. V. McCusker; H. H. Nakano; R. M. Hill (1978). "Optical emissions of triatomic rare gas halides". The Journal of Chemical Physics 68 (10): 4657. doi:10.1063/1.435574. பன்னாட்டுத் தர தொடர் எண்:00219606. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_இருகுளோரைடு&oldid=2691107" இலிருந்து மீள்விக்கப்பட்டது