தங்குதன்(III) குளோரைடு
தங்குதன்(III) குளோரைடு (Tungsten(III) chloride) W6Cl18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்படிக் கொத்துச் சேர்மமான இது பழுப்பு நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படும். தங்குதன்(II) குளோரைடை குளோரினேற்றம் செய்து தங்குதன்(III) குளோரைடு பெறப்படுகிறது.[2] மஞ்சள் பழுப்பு நிறத்தில் இது திண்மமாகக் காணப்படுகிறது. பன்னிரெண்டு இரட்டைப் பால குளோரைடு ஈந்தணைவிகளைக் கொண்ட தங்குதன்(III) குளோரைடு கொத்துச் சேர்மம் நையோபியம் மற்றும் டாண்ட்டலம் தனிம குளோரைடுகளுடன் தொடர்புடைய ஒரு கட்டமைப்பை இது ஏற்றுக்கொள்கிறது. இதற்கு மாறாக, W6Cl12 எட்டு மும்மடங்கு பாலம் அமைத்த குளோரைடுகளைக் கொண்டுள்ளது.
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
12371-22-1 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5251191 |
| |
பண்புகள் | |
Cl18W6 | |
வாய்ப்பாட்டு எடை | 1,741.14 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு திண்மம் |
அடர்த்தி | 5.44 கி·செ.மீ−3 |
உருகுநிலை | 550[1] °C (1,022 °F; 823 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதனுடன் தொடர்புடைய கலப்பு இணைதிறன் கொண்ட W(III)–W(IV) குளோரைடுகளை தங்குதன் அறுகுளோரைடை பிசுமத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.[3]
- 9 WCl6 + 8 Bi → 3 W3Cl10 + 8 BiCl3
மேற்கோள்கள்
தொகு- ↑ Eliseev, S. S.; Synthesis and physicochemical properties of tungsten trichloride. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy 1983, V19(7), P1182-5 CAPLUS
- ↑ Yue‐Qing Zheng, Ekaterina Jonas, Jürgen Nuss, Hans Georg von Schnering (1999). "The DMSO Solvated octahedro‐[W6iCl12aCl6 Cluster Molecule". Z. Anorg. Allg. Chem. 624: 1400–1404. doi:10.1002/(SICI)1521-3749(199809)624:9<1400::AID-ZAAC1400>3.0.CO;2-0.
- ↑ Thurston, J. H.; Kolesnichenko, V.; Messerle, L. (2014). "Trinuclear tungsten halide clusters". Inorganic Syntheses: Volume 36. Inorganic Syntheses. Vol. 36. pp. 24–30. doi:10.1002/9781118744994.ch5. ISBN 9781118744994.
{{cite book}}
:|journal=
ignored (help)