தைட்டானியம்(III) குளோரைடு
தைட்டானியம் (III) குளோரைடு (Titanium(III) chloride) என்பது TiCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கூடிய கனிமச் சேர்மம் ஆகும். குறைந்தது நான்கு தனித்துவமான மூலக்கூறுகள் இதே வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன; கூடுதலாக நீரேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்கள் அறியப்பட்டுள்ளன. TiCl 3 என்பது தைட்டானியத்தின் மிகவும் பொதுவான ஆலைடுகளில் ஒன்றாகும் மற்றும் இது பாலிஒலீஃபின்களை உற்பத்தி செய்வதற்கான முக்கியமான வினையூக்கியாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
தைட்டானியம் முக்குளோரைடு
தைட்டானசு குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
7705-07-9 | |||
ChemSpider | 56398 | ||
EC number | 231-728-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 62646 | ||
வே.ந.வி.ப எண் | XR1924000 | ||
| |||
UNII | GVD566MM7K | ||
பண்புகள் | |||
TiCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 154.225 கி/மோல் | ||
தோற்றம் | சிவப்பு-கருஊதா படிகங்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை | ||
அடர்த்தி | 2.64 கி/செமீ3 | ||
உருகுநிலை | 425 °C (797 °F; 698 K) சிதைகிறது | ||
கொதிநிலை | 960 °C (1,760 °F; 1,230 K) | ||
எளிதில் கரையக்கூடியது | |||
கரைதிறன் | அசிட்டோன், அசிட்டோன்நைட்ரைல், குறிப்பிட்ட சில அமீன்கள் ஆகியவற்றில் கரையக்கூடியது; ஈதர் மற்றும் நீரகக்கரிமம் ஆகியவற்றில் கரையாது | ||
+1110.0·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4856 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Corrosive | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | தைட்டானியம்(III) புளோரைடு தைட்டானியம்(III) புரோமைடு தைட்டானியம்(III) அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம்(III) குளோரைடு குரோமியம்(III) குளோரைடு வெனடியம்(III) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கட்டமைப்பு மற்றும் பிணைப்பு
தொகுTiCl3 இல் ஒவ்வொரு Ti அணுவிலும் ஒரு d எலக்ட்ரான் உள்ளது, இந்த எலக்ட்ரான் அதன் வழிப்பொருள்களை பாராகாந்தமாக ஆக்குகிறது, அதாவது காந்தப்புலத்தில் ஈர்க்கப்படும் பொருளாக மாற்றுகிறது. தைட்டானியம் (III) குளோரைடின் கரைசல்கள் டி-எலக்ட்ரானின் கிளர்ச்சியின் காரணமாக கருஊதா நிறத்தைக் கொண்டுள்ளது.லாப்போர்ட் தேர்வு விதியால் ஆற்றல் மட்டங்களக்கிடையேயான மாற்றம் தடைசெய்யப்பட்டிருப்பதால் நிறம் மிகவும் அடர்ந்ததாக இல்லை.
தொகுப்பு முறை மற்றும் வினைத்திறன்
தொகுTiCl 3 பொதுவாக தைட்டானியம் டெட்ராகுளோரைடைக் குறைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பழைய குறைப்பு வினைகள் ஐதரசனைப் பயன்படுத்தின:[1]
- 2 TiCl 4 + H 2 → 2 HCl + 2 TiCl 3
இது அலுமினியத்துடன் எளிதில் குறைக்கப்பட்டு அலுமினியம் குளோரைடு உடன் கலவையாக,(TiCl3·AlCl 3) விற்கப்படுகிறது. இந்த கலவையை TiCl3(THF )3 ஐ விளைவிப்பதற்கு பிரிக்க முடியும்.[2] இந்த அணைவானது ஒரு நெடுந்தொடர் கட்டமைப்பை ஏற்கிறது.[3]
இதன் ஐதரேட்டானது தைட்டானியத்தை ஐதரோகுளோரிக் நீர்க்கரைசலில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
- 2 Ti + 6 HCl + 6 H2O → 2 TiCl3(H2O)3 + 3 H2
TiCl3 பலவிதமான அணைவுச்சேர்மங்களை உருவாக்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை எண்முகி வடிவத்தைப் பெற்றுள்ளன.TiCl3 ஆனது டெட்ராஐதரோபியூரானுடன் வினைப்படுத்தப்படும் போது வெளிறிய நீல நிற, படிகவடிக, சேர்க்கைப் பொருளான TiCl3(THF)3 உருவாகிறது.[4]
- TiCl3 + 3 C4H8O → TiCl3(OC4H8)3
TiCl3 உடன் டைமெதிலமீனைச் சேர்க்கும் போது அணைவாதலின் காரணமாக இதை ஒத்த அடர் பச்சை நிற அணைவுச் சேர்மமானது உருவாகிறது. வினையில் அனைத்து ஈனிகளும் பரிமாற்றம் செய்யப்படுகிறது, TiCl3 ஆனது டிரைஸ் அசிட்டைல்அசிட்டோனேட்டு அணைவிற்கு முன்னோடிச் சேர்மமாக உள்ளது.
500 °செல்சியசில், TiCl3 ஆனது வெப்பச்சிதைவின் காரணமா இன்னும் குறைக்கப்பட்ட தைட்டானியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது, எளிதில் ஆவியாகக்கூடிய தைட்டானியம் டெட்ராகுளோரைடு(TiCl4) ஆவியாதலின் காரணமாக உருவாகிறது:[5]
- 2 TiCl3 → TiCl2 + TiCl4
தைட்டானியம்(III) குளோரைடானது குளோரைடுகள், ஆல்ககால்கள், ஈதர்கள், நைட்ரைல்கள், கீட்டோன்கள் அல்லது அமீன்கள் ஆகியவற்றை ஈனிகளாகக் கொண்ட சேர்மங்களுடன் நிலைத்தன்மையுள்ள அணைவுச்சேர்மங்களை உருவாக்குகிறது.
பயன்பாடுகள்
தொகுTiCl3 ஒரு முக்கியமான செய்க்லெர்-நட்டா வினையூக்கியாகும். இது பாலிஎத்திலீனின் தொழிலக தயாரிக்பிற்கான மிக முக்கியமான காரணியாக உள்ளதாகும். வினைவேக மாற்றியாகச் செயல்படும் TiCl3 திறனானது முக்கியமாக இதன் பல் உருவத்தோற்றத் (α vs. β vs. γ vs. δ) தன்மை மற்றும் அதன் தயாரிப்பு முறையைச் சார்ந்ததாகும்.[6]
ஆய்வகப் பயன்பாடு
தொகுTiCl3 ஆனது கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு சிறப்பு மிக்க வினைக்காரணியாகவும், ஒடுக்க இணைப்பு வினைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பெரும்பாலும் துத்தநாகம் போன்ற ஒடுக்க வினைக்காரணிகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. இது ஆக்சைம்களை இமீன்களாக ஒடுக்குகிறது.[7] டைட்டானியம் முக்குளோரைடு நைட்ரேட்டை அம்மோனியம் அயனியாகக் குறைத்து அதன் மூலம் நைட்ரேட் மற்றும் அம்மோனியாவின் தொடர்ச்சியான பகுப்பாய்வை அனுமதிக்கிறது.[8] காற்றுக்கு வெளிப்படுத்தப்படும் போது டைட்டானியம் முக்ளோரைடில் மெதுவான சிதைவும் ஏற்படுகிறது, இதன் விளைவாக, குறைத்தல் இணைப்பு வினைகளில் தவறான முடிவுகளை விளைவிக்கின்றன.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ T. R. Ingraham, K. W. Downes, P. Marier, "Titanium(III) Chloride" Inorganic Syntheses, 1960, vol 6, pp. 52–56. எஆசு:10.1002/9780470132371.ch16
- ↑ Jones, N. A.; Liddle, S. T.; Wilson, C.; Arnold, P. L. (2007). "Titanium(III) Alkoxy-N-heterocyclic Carbenes and a Safe, Low-Cost Route to TiCl3(THF)3". Organometallics 26: 755–757. doi:10.1021/om060486d.
- ↑ Handlovic, M.; Miklos, D.; Zikmund, M. "The structure of trichlorotris(tetrahydrofuran)titanium(III)" Acta Crystallographica 1981, volume B37(4), 811-14.எஆசு:10.1107/S056774088100438X
- ↑ Manzer, L. E.; Deaton, Joe; Sharp, Paul; Schrock, R. R. (1982). "Tetrahydrofuran Complexes of Selected Early Transition Metals". Inorg. Synth. 21: 137. doi:10.1002/9780470132524.ch31.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Kenneth S. Whiteley,T. Geoffrey Heggs, Hartmut Koch, Ralph L. Mawer, Wolfgang Immel, "Polyolefins" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a21_487
- ↑ Lise-Lotte Gundersen, Frode Rise, Kjell Undheim, José Méndez-Andino, "Titanium(III) Chloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis எஆசு:10.1002/047084289X.rt120.pub2
- ↑ "Determining Ammonium & Nitrate ions using a Gas Sensing Ammonia Electrode". Soil and Crop Science Society of Florida, Vol. 65, 2006, D.W.Rich, B.Grigg, G.H.Snyder
- ↑ Fleming, M. P; McMurry, J. E.. "Reductive Coupling of Carbonyls to Alkenes: Adamantylideneadamantane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0001.; Collective Volume, vol. 7, p. 1