தைட்டானியம்(III) அயோடைடு
தைட்டானியம்(III) அயோடைடு (Titanium(III) iodide) என்பது TiI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அடர் ஊதா நிறத்தில் காணப்படும் இத்திண்மம் சிதைவடைவதை தவிர கரைப்பான்களில் கரையாது.
இனங்காட்டிகள் | |
---|---|
13783-08-9 | |
பண்புகள் | |
I3Ti | |
வாய்ப்பாட்டு எடை | 428.58 g·mol−1 |
தோற்றம் | கருப்பு-ஊதா திண்மம் |
அடர்த்தி | 4.96 கி.செ.மீ−3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதைட்டானியமும் அயோடினும் சேர்ந்து தைட்டானியம்(III) அயோடைடு உருவாகிறது:[2]
- 2Ti + 3I2 ---> 2 TiI3
TiI4 சேர்மத்தை அலுமினியத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதாலும் தைட்டானியம்(III) அயோடைடு தயாரிக்கலாம்[3].
கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் தைட்டானியம்(III) அயோடைடு முகப்பு பகிர்வு எண்முகத்தின் பலபடியாகத் தோற்றமளிக்கிறது. 323 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் Ti---Ti பிணைப்புக்கு இடையிலான இடைவெளி சமமாக உள்ளது. ஆனால் இவ்வெப்பநிலைக்கு கீழாக இச்சேர்மம் நிலைமாற்றத்திற்கு உட்படுகிறது. தாழ் வெப்பநிலை கட்டத்தில் Ti---Ti தொடர்புகள் குட்டையாகவும் நீண்டும் மாறி மாறி அமைகின்றன. தாழ்வெப்பநிலை கட்டமைப்பானது மாலிப்டினம் டிரைபுரோமைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Joachim Angelkort, Andreas Schoenleber, Sander van Smaalen: Low- and high-temperature crystal structures of. In: Journal of Solid State Chemistry. 182, 2009, S. 525–531, எஆசு:10.1016/j.jssc.2008.11.028.
- ↑ F. Hein, S. Herzog "Molybdenum(III) Bromide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1407.
- ↑ Catherine E. Housecroft, A. G. Sharpe (2005) (in German), [[1], p. 601, கூகுள் புத்தகங்களில் Inorganic Chemistry], Pearson Education, pp. 601, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13039913-2, [2], p. 601, கூகுள் புத்தகங்களில்