அயோடின் மோனோகுளோரைடு

அயோடின் மோனோகுளோரைடு (Iodine monochloride) என்பது ICl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ஆலசனிடை சேர்மமாக உருவாகும் இச்சேர்மம் செம்-பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு அருகில் உருகும். அயோடின் மற்றும் குளோரின் ஆகியவற்றுக்கிடையிலான மின்னெதிர்தன்மையில் உள்ள வேறுபாடு காரணமாக, இந்த மூலக்கூறு மிகவும் இரசாயன முனைவுத்தன்மை கொண்டுள்ளது. மற்றும் I+ அயனியின் ஆதாரமாகவும் செயல்படுகிறது. 1814 ஆம் ஆண்டில் கே-லுசாக்கு என்பவரால் இச்சேர்மம் கண்டுபிடிக்கப்பட்டது. அயோடின் மோனோகுளோரைடு முதன் முதலில் கண்டறியப்பட்ட ஆலசனிடை சேர்மம் ஆகும்.[1]

அயோடின் மோனோகுளோரைடு
I-Cl bond length = 232.07 pm
I-Cl bond length = 232.07 pm
Space-filling model
Space-filling model
A sample of Iodine monochloride reagent
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அயோடின் மோனோகுளோரைடு
அயோடின்(I) குளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ அயோடேன்
வேறு பெயர்கள்
அயோடின் குளோரைடு
இனங்காட்டிகள்
7790-99-0 Y
ChemSpider 23042 Y
EC number 232-236-7
InChI
  • InChI=1S/ClI/c1-2 Y
    Key: QZRGKCOWNLSUDK-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/ClI/c1-2
    Key: QZRGKCOWNLSUDK-UHFFFAOYSA-N
  • InChI=1/ClI/c1-2
    Key: QZRGKCOWNLSUDK-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த அயோடின்-மோனோகுளோரைடு
பப்கெம் 24640
  • ClI
UNII 0SMG5NLU45 Y
UN number 1792
பண்புகள்
ICl
வாய்ப்பாட்டு எடை 162.35 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு
அடர்த்தி 3.10 கி/செ.மீ3
உருகுநிலை 27.2 °C (81.0 °F; 300.3 K) (α-வடிவம்)
13.9 °C (β-வடிவம்)
கொதிநிலை 97.4 °C (207.3 °F; 370.5 K)
நீராற்பகுத்தல்
கரைதிறன் CS2
அசிட்டிக் காடி
பிரிடீன்
எத்தனால், டை எத்தில் ஈதர், ஐதரோகுளோரிக் காடி ஆகியவற்றில் கரையும்
−54.6×10−6 cm3/mol
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் தன்மை கொண்டது, நீருடன் வினைபுரிந்து ஐதரோகுளோரிக் காடியை வெளியிடுகிறது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் https://chemicalsafety.com/sds1/sdsviewer.php?id=30683304
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

கீழுள்ள சமன்பாட்டின் படி, 1:1 மோலார் விகிதத்தில் ஆலசன்கள் இரண்டையும் இணைப்பதன் மூலம் அயோடின் மோனோகுளோரைடு தயாரிக்கப்படுகிறது.

I2 + Cl2 → 2 ICl

அயோடின் படிகங்கள் வழியாக குளோரின் வாயு அனுப்பப்படும் போது, அயோடின் மோனோகுளோரைடின் பழுப்பு நீராவியை கவனிக்க முடியும். அடர் பழுப்பு அயோடின் மோனோகுளோரைடு திரவம் சேகரிக்கப்படுகிறது. அதிகப்படியான குளோரின் அயோடின் மோனோகுளோரைடை அயோடின் முக்குளோரைடாக மாற்றியமைக்கிறது:

ICl + Cl2 ⇌ ICl3

பல்லுருக்கள்

தொகு

அயோடின் மோனோகுளோரைடு இரண்டு உருக்களைக் கொண்டுள்ளது; கருப்பு நிற ஊசிகளாகக் காணப்படும் (செலுத்தப்படும் ஒளியால் சிவப்பு நிறம்) α-ICl, 27.2 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும். மற்றொன்று கருப்பு நிற தகடுகளாகக் காணப்படும் β-ICl (செலுத்தப்படும் ஒளியால் சிவப்பு நிறம்) 13.9 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[2]

இரண்டு பல்லுருக்களின் படிக அமைப்புகளிலும் மூலக்கூறுகள் குறுக்கு நெடுக்கான சங்கிலிகளில் அமைக்கப்பட்டிருக்கும். β-ICl, P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சரிவச்சு படிகவமைப்பில் காணப்படும்.[3]

வினைகள்

தொகு

அயோடின் மோனோகுளோரைடு HF மற்றும் HCl போன்ற அமிலங்களில் கரையக்கூடியது ஆனால் தூய நீருடன் வினையில் ஈடுபட்டு HCl, அயோடின் மற்றும் அயோடிக் அமிலத்தை உருவாக்குகிறது.

Cl + H2O → HCl + HI + 1⁄2O2
2 ICl + H2O → 2 HCl + I2 + 1⁄2O2
5 ICl + 3 H2O → 5 HCl + HIO3 + 2 I2

பயன்கள்

தொகு

கரிமத் தொகுப்பு வினைகளில் ICL ஒரு பயனுள்ள வினையாக்கியாகும்.[2] சில அரோமாட்டிக்கு அயோடைடுகளின் தயாரிப்பில் எலக்ட்ரான் கவரி அயோடின் மூலமாக இது பயன்படுத்தப்படுகிறது.[4] அயோடின் மோனோகுளோரைடு C-Si பிணைப்புகளையும் பிளவுபடுத்துகிறது.

ICL சேர்மம் ஆல்க்கீன்களில் உள்ள இரட்டைப் பிணைப்புகளுடன் சேர்ந்து குளோரோ-அயோடோ ஆல்கேன்களை கொடுக்கிறது.

RCH=CHR′ + ICl → RCH(I)–CH(Cl)R′

சோடியம் அசைடு முன்னிலையில் இத்தகைய வினைகள் நடக்கும் பொழுது அயோடோ-அசைடு RCH(I)–CH(N3)R′ உருவாகும்.[5]

அசிட்டிக் அமிலத்தில் கரைந்த அயோடின் மோனோகுளோரைடு கரைசல் ஒரு பொருளின் அயோடின் மதிப்பை தீர்மானிக்கப் பயன்படுகிறது.

குளோரேட்டுடன் வினையாற்றுவதன் மூலம் அயோடேட்டுகளைத் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். குளோரின் ஓர் உடன் விளைபொருளாக வெளியிடப்படுகிறது.

அயோடின் மோனோகுளோரைடு என்பது லூயிசு அமிலமாகும். இது இருமெத்தில் அசிட்டமைடு மற்றும் பென்சீன் போன்ற லூயிசு காரங்களுடன் 1:1 கூட்டுசேர் பொருள்களை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 790. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. 2.0 2.1 Brisbois, R. G.; Wanke, R. A.; Stubbs, K. A.; Stick, R. V. "Iodine Monochloride" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2004 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.ri014
  3. Carpenter, G. B.; Richards, S. M. (1 April 1962). "The crystal structure of β-iodine monochloride". Acta Crystallographica 15 (4): 360–364. doi:10.1107/S0365110X62000882. 
  4. Wallingford, V. H.; Krüger, P. A. (1943). "5-Iodo-anthranilic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0349. ; Collective Volume, vol. 2, p. 349
  5. Padwa, A.; Blacklock, T.; Tremper, A.. "3-Phenyl-2H-Azirine-2-carboxaldehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0893. ; Collective Volume, vol. 6, p. 893
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_மோனோகுளோரைடு&oldid=3871373" இலிருந்து மீள்விக்கப்பட்டது