செருமேனியம் இருகுளோரைடு

செருமேனியம் இருகுளோரைடு (Germanium dichloride) என்பது GeCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் செருமேனியம் +2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.

செருமேனியம் இருகுளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Germanium dichloride
முறையான ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோசெருமேனிலிடின்
வேறு பெயர்கள்
இருகுளோரோசெருமைலீன்

செருமேனியம்(II) குளோரைடு

செருமேனசு குளோரைடு
இனங்காட்டிகள்
10060-11-4
ChemSpider 4885679?
EC number 233-192-1
InChI
  • InChI=1S/Cl2Ge/c1-3-2
    Key: QHGIKMVOLGCZIP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6327122
SMILES
  • Cl[Ge]Cl
பண்புகள்
GeCl2
வாய்ப்பாட்டு எடை 143.546 கி/மோல்
தோற்றம் வெண்மை-வெளிர் மஞ்சள் நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

செருமேனியம் நாற்குளோரைடை , செருமேணியம் உலோகத்தின் மீது 650 0 செல்சியசு வெப்பநிலையில் செலுத்தும் போது திண்ம செருமேனியம் இருகுளோரைடு உண்டாகிறது[1]

GeCl4 + Ge → 2GeCl2.

குளோரோ செருமேன் , GeH3Cl 70 0 செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்தும் செருமேனியம் இருகுளோரைடு உண்டாகிறது[1]

2 GeH3Cl → GeCl2 + GeH4 + H2.

வினைகள் தொகு

செருமேனியம் இருகுளோரைடு நீராற்பகுப்பு அடைந்து மஞ்சள் நிறமான செருமேனியம்(II) ஐதராக்சைடு உருவாகிறது. இதை இலேசாக சூடாக்கும் போது பழுப்புநிறமான செருமேனியம் ஓராக்சைடு உண்டாகிறது.:[1]

GeCl2 + 2H2O → Ge(OH)2 + 2HCl
Ge(OH)2 → GeO + H2O

ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட செருமேனியம் இருகுளோரைடு கரைசல் வலிமையான ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது[2]. குளோரைடு அயனியுடன் வினைபுரியும் போது பட்டைக்கூம்பு GeCl3− அயனியைக் கொண்டுள்ள அயனிச்சேர்மங்கள் உருவாகின்றன[3]. உதாரணமாக ருபீடியம் மற்றும் சீசியம் குளோரைடு சேர்மங்கள் உருத்திரிந்த பெரோவ்சிகைட்டு அமைப்பிலுள்ள RbGeCl3 சேர்மத்தைக் கொடுக்கிறது[1]

மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடு பெரும்பாலும் இருகுளோரோசெருமைலீன் என்று அழைக்கப்படுகிறது. இது கார்பீனை ஒத்திருக்கிறது. வாயுநிலை GeCl2 சேர்மம் வளைந்த மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளதாக வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஊகிக்கிறது. ஈராக்சேன் அல்லது டையாக்சேன் அணைவுச் சேர்மம் வேதிவினைக்குத் தேவையான மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடினை வழங்கும் மூலமாக இருக்கிறது. GeCl2 அதிக வினைத்திறன் மிக்கதாகவும் பலவகையான வேதிப் பிணைப்புகளில் உட்புகும் தன்மையும் கொண்டு செயல்படுகிறது.

மூலக்கூற்று நிலை GeCl2, இருகுளோரோசெருமைலீன் தொகு

மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடு பெரும்பாலும் இருகுளோரோசெருமைலீன் என்று அழைக்கப்படுகிறது. இது கார்பீனை ஒத்திருக்கிறது. வாயுநிலை GeCl2 சேர்மம் வளைந்த மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளதாக வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஊகிக்கிறது[4]. ஈராக்சேன் அல்லது டையாக்சேன் அணைவுச் சேர்மம் வேதிவினைக்குத் தேவையான மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடினை வழங்கும் மூலமாக இருக்கிறது. GeCl2 அதிக வினைத்திறன் மிக்கதாகவும் பலவகையான திப் பிணைப்புகளில் உட்புகும் தன்மையும் கொண்டு செயல்படுகிறது[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
  3. Kociok-Köhn, G.; Winter, J. G.; Filippou, A. C. (1999). "Trimethylphosphonium trichlorogermanate(II)". Acta Cryst. C55 (3): 351–353. doi:10.1107/S010827019801169X. 
  4. Tsuchiya, Masaki J.; Honjou, Hiroaki; Tanaka, Keiichi; Tanaka, Takehiko; (1995). "Millimeter-wave spectrum of germanium dichloride GeCl2. Equilibrium structure and anharmonic force field". Journal of Molecular Structure 352–353: 407–415. doi:10.1016/0022-2860(95)08830-O. 
  5. Egorov, M.P.; Gaspar, P. (1994). "Germanium: Organometallic chemistry". Encyclopedia of Inorganic chemistry. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-93620-0. 

.