பாசுபரசு முக்குளோரைடு

வேதிச்சேர்மம்

பாசுபரசு முக்குளோரைடு அல்லது பாசுபரசு டிரைகுளோரைடு (Phosphorus trichloride) என்பது பாசுபரசு, குளோரின் ஆகிய தனிமங்களைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். மூலக்கூறு வாய்பாடு PCl3 ஐக் கொண்ட இச்சேர்மம் முக்கோணப் பட்டைக்கூம்பு வடிவில் காணப்படுகிறது. குளோரினுடன் பாசுபரசு வினை புரிந்து மூன்று வகையான சகப்பிணைப்பு சேர்மங்களாகிய பாசுபரசு குளோரைடுகளைக் கொடுக்கிறது. இவற்றில் பாசுபரசு முக்குளோரைடு முக்கியமானதாகும். வேதித் தொழிற்துறையில் பல்வேறு கரிம பாசுபரசு கலவைகள் உற்பத்தி செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

Phosphorus trichloride
Phosphorus trichloride
Phosphorus trichloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபரசு முக்குளோரைடு
வேறு பெயர்கள்
பாசுபரசு (III)குளோரைடு
பாசுபரசு குளோரைடு
இனங்காட்டிகள்
7719-12-2 Y
ChEBI CHEBI:30334 Y
ChemSpider 22798 Y
EC number 231-749-3
InChI
  • InChI=1S/Cl3P/c1-4(2)3 Y
    Key: FAIAAWCVCHQXDN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24387
வே.ந.வி.ப எண் TH3675000
  • ClP(Cl)Cl
UN number 1809
பண்புகள்
PCl3
வாய்ப்பாட்டு எடை 137.33 g/mol
தோற்றம் Colorless liquid
அடர்த்தி 1.574 g/cm3
உருகுநிலை −93.6 °C (−136.5 °F; 179.6 K)
கொதிநிலை 76.1 °C (169.0 °F; 349.2 K)
hydrolysis
other solvents-இல் கரைதிறன் பென்சீன், CS2, ஈதர், குளோரோஃபார்ம், ஆலசனேற்றப்பட்ட கரைப்பான் ஆகியவற்றில் கரையக்கூடியது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.516 (14 °C)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.97 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−319.7 kJ/mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0696
ஈயூ வகைப்பாடு Toxic (T)
Harmful (Xn)
Corrosive (C)
R-சொற்றொடர்கள் R14-R26/28-R35-R48/20
S-சொற்றொடர்கள் (S1/2)-S7/8-S26-S36/37/39-S45
Lethal dose or concentration (LD, LC):
Rat, Oral, 18 mg/kg [1]
தொடர்புடைய சேர்மங்கள்
phosphorus chlorides
தொடர்புடையவை
Phosphorus pentachloride
Phosphorus oxychloride
Diphosphorus tetrachloride
தொடர்புடைய சேர்மங்கள் Phosphorus trifluoride
Phosphorus tribromide
Phosphorus triiodide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பாசுபரசை ஒரு நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள வெப்பப் படுத்தும் கலனில் எடுத்துக் கொண்டு உலர்ந்த குளோரின் வாயுவை அதன் வழியாகச் செலுத்தினால் பாசுபரசு முக்குளோரைடு ஆவியாக வெளியேறுகிறது. உலக பாசுபரசு முக்குளோரைடு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது[2]. இவ்வாயுவை உறைகலவையினுள் வைக்கப்பட்ட கலத்தினுள் செலுத்தினால் நீர்மமாக மாறுகிறது. மேலும் வெண் பாசுபரசு மீது செலுத்தி மீண்டும் காய்ச்சி வடித்தால் இதர பாசுபரசு குளோரைடு மாசுக்கள் நீக்கப்படுகின்றன.

P4 + 6 Cl2 → 4 PCl3

பாசுபரசு முக்குளோடு தொழில்முறையாக உற்பத்தி செய்யபடுவதை அட்டவணை 3ல் பட்டியலிட்டு, இரசாயன ஆயுதங்கள் மாநாடு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அம்மாநாடு குறைவான நச்சுத்தன்மை கொண்ட சிவப்பு பாசுபரசை[3] பயன்படுத்தவும் பரிந்துரை செய்கிறது. இதை செயற்கையாக தயாரிக்க முடியாது என்றாலும் ஆய்வக பயன்பாட்டுக்கு மலிவாக கிடைக்க் கூடியதாக உள்ளது.

இயற்பியல் பண்புகள்

தொகு
  • குறைந்த கொதிநிலை உடைய திரவமான இது நிறமற்றது.
  • ஈரக்காற்றில் புகையும் தன்மை கொண்டது.
  • கார மணமுடையது.

வேதியியல் பண்புகள்

தொகு

ஆக்சிசனேற்ற - ஒடுக்க வினைகள்

தொகு

பாசுபரசு பெண்டா குளோரைடு (PCl5), தயோ பாசுபோரைல் குளோரைடு (PSCl3), அல்லது பாசுபரசு ஆக்சிகுளோரைடடு (POCl3) ஆகியவற்றுடன் ஆக்சிசனேற்றம் பெற்று ஏனைய பாசுபரசு சேர்மங்கள் தயாரிப்பிற்கான முன்னோடியாக PCl3 விளங்குகிறது.

பாசுபரசு முக்குளோரைடு ஆவியும் ஐதரசன் வாயுவும் கலந்த கலவையில் மின்சுமை செலுத்தப்பட்டால் டைபாசுபரசு டெட்ராகுளோரைடு (P2Cl4) என்ற அரிய பாசுபரசு குளோரைடு உருவாகிறது.

மின்னணு கவரியாக PCl3

தொகு

கரிம பாசுபரசு சேர்மங்கள், குறிப்பாக பாசுபைட்டு மற்றும் பாசுபோனேட்டு போன்றவை தயாரிப்பிற்கு பாசுபரசு முக்குளோரைடு முன்னோடியாக விளங்குகிறது.பொதுவாக இச்சேர்மங்களில் பாசுபரசு முக்குளோரைடில் உள்ள குளோரின் அணுக்கள் காணப்படுவதில்லை.

நீருடன் வேகமாக வினைபுரிந்து பாசுபரசு அமிலம் மற்றும் ஐதரசன் குளோரைடு வாயுவைத் தருகிறது.

PCl3 + 3 H2O → H3PO3 + 3 HCl

மேற்கோள்கள்

தொகு
  1. External MSDS
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. M. C. Forbes, C. A. Roswell, R. N. Maxson (1946). "Phosphorus(III) Chloride". Inorg. Synth. 2: 145–7. doi:10.1002/9780470132333.ch42. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபரசு_முக்குளோரைடு&oldid=4114962" இலிருந்து மீள்விக்கப்பட்டது