குரோமியம்(II) குளோரைடு

குரோமியம் (II) குளோரைடு (Chromium(II) chloride) என்பது CrCl2(H2O)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மத்தைக் குறிக்கிறது. நீரற்ற திண்மமனாது தூய்மையாக இருக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கும், இருப்பினும் வணிக மாதிரிகள் பெரும்பாலும் சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். இது நீர் உறிஞ்சும் திறன் தன்மை உடையது ஆகும். இதன் டெட்ராஐதரேட்டு Cr(H2O)4Cl2 காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு நீரில் கரைந்து பிரகாசமான நீல நிறக் கரைசலை வழங்குகிறது. குரோமியம் (II) குளோரைடு வணிக ரீதியான பயன்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மற்ற குரோமியம் அணைவுச் சேர்மங்களின் தொகுப்புக்கு ஆய்வக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

குரோமியம்(II) குளோரைடு
3D model of chromium(II) chloride, green atom is chloride
Sample of chromium(II) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(II) குளோரைடு
வேறு பெயர்கள்
குரோமஸ் குளோரைடு
இனங்காட்டிகள்
(நீரற்ற), 13931-94-7 (டெட்ராஐதரேட்டு) 10049-05-5 (நீரற்ற), 13931-94-7 (டெட்ராஐதரேட்டு)
ChemSpider 23252 Y
InChI
 • InChI=1S/2ClH.Cr/h2*1H;/q;;+2/p-2 Y
  Key: XBWRJSSJWDOUSJ-UHFFFAOYSA-L Y
 • InChI=1/2ClH.Cr/h2*1H;/q;;+2/p-2
  Key: XBWRJSSJWDOUSJ-NUQVWONBAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24871
வே.ந.வி.ப எண் GB5250000
SMILES
 • Cl[Cr]Cl
UNII CET32HKA21 Y
பண்புகள்
Cl2Cr
வாய்ப்பாட்டு எடை 122.90 g·mol−1
தோற்றம் வெண்ணிறம் முதல் சாம்பல் நிறம் வரை/பச்சை நிறத்தூள் (நீரற்றது), very நீர் உறிஞ்சும் திறன்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.88 கி/செமீ3 (24 °செல்சியசு)[1]
உருகுநிலை 824 °C (1,515 °F; 1,097 K)
நீரற்றது
51 °C (124 °F; 324 K)
டெட்ராஐதரேட்டு, சிதைவுறுகிறது[1]
கொதிநிலை 1,302 °C (2,376 °F; 1,575 K)
நீரற்றது[1]
கரையும் தன்மை உடையது[1]
கரைதிறன் மதுசாரம், ஈதர் ஆகியவற்றில் கரையாதது
காடித்தன்மை எண் (pKa) 2
+7230·10−6 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், உருக்குலைந்த உரூத்தைல், oP6[2]
ஒற்றைச்சாய்சதுரம், (டெட்ராஐதரேட்டு)[3]
புறவெளித் தொகுதி Pnnm, No. 58 (நீரற்றது)[2]
P21/c, No. 14 (டெட்ராஐதரேட்டு)[4]
Lattice constant a = 6.64 Å, b = 5.98 Å, c = 3.48 Å (நீரற்றது)[2]
படிகக்கூடு மாறிலி
எண்முகி (Cr2+, நீரற்றது)[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−395.4 கிலோ ஜூல்/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
115.3 ஜூல்/மோல்·கெல்வின்[1]
வெப்பக் கொண்மை, C 71.2 ஜூல்/மோல்·கெல்வின்[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal word Warning
H302, H315, H319, H335[5]
P261, P305+351+338[5]
Lethal dose or concentration (LD, LC):
1870 மிகி/கிகி (எலி, வாய்வழி)[6]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் குரோமியம்(II) புளோரைடு
குரோமியம்(II) புரோமைடு
குரோமியம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(III) குளோரைடு
குரோமியம்(IV) குளோரைடு
மாலிப்டினம்(II) குளோரைடு
தங்கதன் (II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தொகுப்பு தொகு

குரோமியம் (III) குளோரைடை ஐதரசனுடன் 500° செல்சியசில் ஒடுக்குவதன் மூலம் குரோமியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது:

2 CrCl 3 + H 2 → 2 CrCl 2 + 2 HCl

அல்லது மின்னாற்பகுப்பு மூலமும் தயாரிக்கப்படுகிறது. [7]

சிறிய அளவிலான தயாரிப்புகளில் CrCl3 ஐ ஒடுக்க இலித்தியம் அலுமினியம் ஐதரைடு, துத்தநாகம் அல்லது தொடர்புடைய வினைக்காரணிகளை பயன்படுத்தலாம்.

4 CrCl 3 + LiAlH 4 → 4 CrCl 2 + LiCl + AlCl 3 + 2 H 2
2 CrCl 3 + Zn → 2 CrCl 2 + ZnCl 2

ஐதரசன் குளோரைடுடன் குரோமியம் (II) அசிடேட் கரைசலை வினைப்படுத்துவதன் மூலமும் CrCl2 தயாரிக்கப்படலாம். [8]

Cr 2 (OAc) 4 + 4 HCl → 2 CrCl 2 + 4 AcOH

கட்டமைப்பு மற்றும் பண்புகள் தொகு

நீரற்ற குரோமியம்(II) குளோரைடு வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும்.[8] இருப்பினும், வணிக மாதிரிகள் பெரும்பாலும் சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை பிஎன்என்எம் வெளித்தொகுதியில் படிகமாகிறது. இது சேர்மத்தின் உரூத்தைல் வடிவமானது சீர்குலைந்ததால் ஏற்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு; இது கால்சியம் குளோரைடுக்கு ஒத்த வடிவத்தைக் கொண்டதாக இருக்கிறது. Cr மையங்களானவை ஜான்-டெல்லர் விளைவால் சிதைக்கப்பட்டு எண்முகி வடிவத்தைப் பெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. 
 2. 2.0 2.1 2.2 2.3 Tracy, Joseph W.; Gregory, N.W.; Lingafelter, E.C.; Dunitz, J.D.; Mez, H.-C.; Rundle, R.E.; Scheringer, Christian; Yakel, H.L. et al. (1961). "The crystal structure of chromium(II) chloride". Acta Crystallographica 4 (9): 927–929. doi:10.1107/S0365110X61002710. 
 3. H.G. von; Brand. "Struktur und Eigenschaften des blauen Chrom(II)‐chlorid‐tetrahydrats CrCl2. 4H2O". Wiley online library. 15 செப்டம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. H.G. von; Brand. "Struktur und Eigenschaften des blauen Chrom(II)‐chlorid‐tetrahydrats CrCl2. 4H2O". Wiley online library. 15 செப்டம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 Sigma-Aldrich Co., Chromium(II) chloride. Retrieved on 2014-07-04.
 6. 6.0 6.1 "MSDS of Chromium(II) chloride". fishersci.ca. Fisher Scientific. 2014-07-04 அன்று பார்க்கப்பட்டது.
 7. Holah, D. G.; Fackler, Jr. John P. (1967). "Anhydrous Chromium(II) Chloride". Inorg. Synth. 10: 26-35. doi:10.1002/9780470132418.ch4. 
 8. 8.0 8.1 Riley, edited by Georg Brauer ; translated by Scripta Technica, Inc. Translation editor Reed F. (1963). Handbook of preparative inorganic chemistry. Volume 1 (2nd ). New York, N.Y.: Academic Press. பக். 1337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0121266011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(II)_குளோரைடு&oldid=2803174" இருந்து மீள்விக்கப்பட்டது