புரோமின் ஒற்றைக்குளோரைடு
புரோமின் ஒற்றைக்குளோரைடு (Bromine monochloride, புரோமின் மொனோகுளோரைடு) என்ற வேதிச்சேர்மம் புரோமின்(I) குளோரைடு, புரோமோ குளோரைடு, புரோமின் குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு BrCl ஆகும். உப்பீனிகளுக்கு இடையில் உருவாகியுள்ள கனிம சேர்மத்திற்கு இதுவொரு உதாரணமாகும். பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலான வாயு வடிவத்தில் உள்ள இதன் கொதிநிலை 5° செ ஆகும். இதனுடைய உருகுநிலை –66° செ ஆகும். இதனுடைய சிஏஎசு எண் 13863-41-7 என்று அமெரிக்க வேதியியல் கழகமும், ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள வணிக வேதிப்பொருட்களின் விவரப்பட்டியல் (EINECS) எண் 237-601-4 என்று ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகளின் குழுமமும் வகைப்ப்படுத்தியுள்ளன[1]. புரோமின் ஒற்றை குளோரைடு ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகும்.
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமின்(I) குளோரைடு
புரோமோகுளோரைடு புரோமின் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13863-41-7 ![]() | |
ChemSpider | 55600 ![]() |
EC number | 237-601-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
UN number | 2901 |
பண்புகள் | |
BrCl | |
வாய்ப்பாட்டு எடை | 115.357 g/mol |
அடர்த்தி | 2.172 g/cm3 |
உருகுநிலை | −54 °C (−65 °F; 219 K) |
கொதிநிலை | 5 °C (41 °F; 278 K) |
other solvents-இல் கரைதிறன் | 1.5 g/L |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பயன்கள் தொகு
இரண்டாம் நிலை பாதரச சேர்மங்களின் (Hg(II)) ஆக்சினேற்ற வினையில் பாதரச அளவை நிர்ணயிக்கும் பகுப்பாய்வு வேதியியலில் புரோமின் ஒற்றைக்குளோரைடு பயன்படுகிறது.
தொழில்துறை மறுசுழற்சி குளிரூட்டும் நீர் அமைப்புகளில் உயிர்கொல்லியாகப் பயன்படுகிறது. குறிப்பாக பாசிக் கொல்லியாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் பொதுவாக நச்சுக் கொல்லியாகவும் புரோமின் ஒற்றைக்குளோரைடு பயன்படுகிறது.
சில Li-SO2 மின்கலன்களில் மின்னழுத்த அதிகரிப்புக்கும் ஆற்றலடர்த்தி அதிகரிப்புக்கும் புரோமின் ஒற்றைக்குளோரைடு கூடுதலாக சேர்க்கப்படுகிறது[2].
மேற்கோள்கள் தொகு
- ↑ Gangolli, S.; வேதியியலுக்கான வேந்திய சங்கம் (1999). The Dictionary of Substances and Their Effects. பக். 676. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85404-808-1.
- ↑ "Battery Chemistry - Lithium / Thionyl Chloride". GlobalSpec இம் மூலத்தில் இருந்து 2007-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071223174334/http://electronic-components.globalspec.com/specifications/electrical_electronic_components/batteries/lithium_batteries. பார்த்த நாள்: 2008-07-09.