குளோரின் ஒருபுளோரைடு

வேதிச் சேர்மம்

குளோரின் ஒருபுளோரைடு(Chlorine monofluoride) என்பது ClF என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.குளோரின் மோனோபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற வாயுவாகக் காணப்படும் இது உயர் வெப்பநிலையிலும் கூட நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. -100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கும்போது குளோரின் ஒருபுளோரைடு வெளிறிய மஞ்சள்நிற திரவமாகக் குறுக்கமடைகிறது. இதனுடைய பல பண்புகள் மூல ஆலசன்களான அல்லது உப்பீனிகளான குளோரின் மற்றும் புளோரின் ஆகியனவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது.[1]

குளோரின் ஒருபுளோரைடு
Chlorine monofluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரின் ஒருபுளோரைடு
வேறு பெயர்கள்
குளோரின் புளோரைடு
இனங்காட்டிகள்
7790-89-8 Y=
ChemSpider 109879 N
InChI
  • InChI=1S/ClF/c1-2 N
    Key: OMRRUNXAWXNVFW-UHFFFAOYSA-N N
  • InChI=1/ClF/c1-2
    Key: OMRRUNXAWXNVFW-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123266
  • ClF
பண்புகள்
ClF
வாய்ப்பாட்டு எடை 54.45 கி/மோல்
அடர்த்தி 1.62 கி.மி.லி
(திரவம், −100 °செ)
உருகுநிலை −155.6 °C (−248.1 °F; 117.5 K)
கொதிநிலை −100.1 °C (−148.2 °F; 173.1 K)
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.881 D
(2.94 × 10−30 C m)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−56.5 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
217.91 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 33.01 J K−1 mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வினைகள்

தொகு

குளோரின் ஒருபுளோரைடு ஒரு பல்தி்றமிக்க புளோரினேற்றும் செயலியாக விளங்குகிறது. உலோகங்களையும் அலோகங்களையும் அவற்றின் புளோரைடுகளாக மாற்றி குளோரின் வாயுவையும் அச்செயல்முறையின் விளைவாக வெளியிடுகிறது. உதாரணமாக தங்குதனை தங்குதன் அறுபுளோரைடாகவும், செலினியத்தை செலினியம் நான்மபுளோரைடாகவும் மாற்றுகிறது.

W + 6 ClF → WF6 + 3 Cl2
Se + 4 ClF → SeF4 + 2 Cl2

பல பிணைப்புகளாக கூட்டு வினையின் மூலம் அல்லது ஆக்சிசனேற்ற வினையின் மூலம் சேர்மங்களை இச்சேர்மம் குளோரோபுளோரினேற்றமும் செய்கிறது. உதாரணமாக கார்பன் ஓராக்சைட்டில் உள்ள முப்பிணைப்பில் புளோரினையும் குளோரினையும் சேர்த்துவிடுகிறது.

CO + ClF →  

மேற்கோள்கள்

தொகு
  1. Otto Ruff, E. Ascher (1928). "Über ein neues Chlorfluorid-CIF3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 176 (1): 258–270. doi:10.1002/zaac.19281760121. 

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரின்_ஒருபுளோரைடு&oldid=3871407" இலிருந்து மீள்விக்கப்பட்டது