டிசிப்ரோசியம்(II) குளோரைடு
டிசிப்ரோசியம்(II) குளோரைடு (Dysprosium(II) chloride) என்பது DyCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியம் இரு குளோரைடு, டிசிப்ரோசியம் டைகுளோரைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. டிசிப்ரோசியமும் குளோரினும் சேர்ந்து இந்த அயனச் சேர்மம் உருவாகும். டிசிப்ரோசியம் சேர்மங்களில் டிசிப்ரோசித்தின் இயல்பான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆக இருக்கும் ஆனால் இந்த உப்பு ஒரு குறைக்கப்பட்ட நிலையிலுள்ள சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
டிசிப்ரோசியம்(II) குளோரை
டிசிப்ரோசியம் டைகுளோரைடு டிசிப்ரோசியம் இருகுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13767-31-2[1] | |
ChemSpider | 64878762 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57348181 |
| |
பண்புகள் | |
DyCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 233.406 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | NdCl2, SmCl2, EuCl2, TmCl2, YbCl2 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம்(II) குளோரைடு தோற்றத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் இருக்கும். உப்பு காற்றில் வெளிப்பட்டால் ஆக்சிசனேற்றத்தால் சேதமடைகிறது. இது ஒரு மின் தடையை கொடுக்கும் சேர்மமாகும்.[2]
இசுட்ரோன்சியம் புரோமைடு, இட்டெர்பியம் டைகுளோரைடு மற்றும் டெர்பியம் டைகுளோரைடு ஆகிய சேர்மங்களின் கட்டமைப்பை போன்ற அமைப்பையே இதுவும் கொண்டுள்ளது. டிசிப்ரோசியம்(II) குளோரைடு இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. குறைந்த வெப்பநிலை வடிவம் 652 °செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவாக உள்ளது. a=6.69, b=6.76, மற்றும் c=7.06 Å என்ற அளவுகளில் அலகு செல் பரிமாணங்கள் உள்ளன.[3]
தயாரிப்பு
தொகுஉருகிய டிசிப்ரோசியம் முக்குளோரைடை டிசிப்ரோசியம் உலோகத்துடன் சேர்த்து சூடாக்கி, விரைவாகத் தணிப்பதன் மூலம் டிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மத்தை தயாரிக்கலாம். மாலிப்டினம், நையோபியம் அல்லது தாண்டலம் புடக்குப்பிகள் பயன்படுத்தப்பட்டால் டிசிப்ரோசியம் உலோகக் கலவை உருவாவதைத் தவிர்க்க இயலும்.[4]
வினைகள்
தொகுடிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மம் பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு இளக்கிகளுடன் சேர்க்கப்பட்டால் தைட்டானியம் டைகுளோரைடை தைட்டானியம் உலோகமாக குறைக்கும் திறன் கொண்டது.[5]
- Ti2+ + 2Dy2+ → Ti (திண்மம்) + 2Dy3+
தொடர்புடைய பிற சேர்மங்கள்
தொகுஇலித்தியத்துடன் சேர்ந்த ஒரு முப்படி டிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மமும் அறியப்படுகிறது:(LiDy2Cl5) இலித்தியம் உலோகத்தையும் டிசிப்ரோசியம்(III) குளோரைடு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 700 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் இந்த முப்படி சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இதுவும் கருப்பு நிறத்தில் காணப்படும். LiDy2Cl5 சேர்மத்தின் கட்டமைப்பு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் C2/c 4 என்ற இடக்குழுவில் a = 16.45.6 ; b = 6.692; மற்றும் c = 7.267; என்ற அணிக்கோவை அளவுருக்களும் β = 95.79° என்ற கோண அளவும் கொண்ட படிக வடிவமாக உள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dysprosium dichloride". webbook.nist.gov (in ஆங்கிலம்).
- ↑ Macintyre, Jane E. (1992-07-23). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2867. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
- ↑ Corbett, John D.; McCollum, Bill C. (May 1966). "Rare Earth Metal-Metal Halide Systems. IX. The Dysprosium-Dysprosium(III) Chloride System and the Preparation of Dysprosium(II) Chloride". Inorganic Chemistry 5 (5): 938–940. doi:10.1021/ic50039a050.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1977-09-01. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057869-9.
- ↑ Yasuda, Kouji; Saegusa, Kunio; Okabe, Toru H. (January 2011). "Aluminum Subhalide as a Reductant for Metallothermic Reduction". High Temperature Materials and Processes 30 (4–5): 411. doi:10.1515/htmp.2011.063. Bibcode: 2011HTMP...30..411Y.
- ↑ Meyer, Gerd (September 1983). "Reduced ternary rare earth halides: State of the art". Journal of the Less Common Metals 93 (2): 371–380. doi:10.1016/0022-5088(83)90190-X.