நியோடிமியம்(II) குளோரைடு
நியோடிமியம்(II) குளோரைடு (Neodymium(II) chloride) என்பது NdCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நியோடிமியம் டைகுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம் இருகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 64878486 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57376283 |
| |
பண்புகள் | |
NdCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 215.14 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற திண்மம்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Pnma, No. 62 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம்(II) புரோமைடு நியோடிமியம்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | SmCl2, EuCl2, DyCl2, TmCl2, YbCl2. |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநியோடிமியம்(III) குளோரைடுடன் இலித்தியம் உலோகம்/நாப்தலீன் அல்லது டெட்ரா ஐதரோபியூரானில் கரைக்கப்பட்ட இலித்தியம் குளோரைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி நியோடிமியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
நியோடிமியம்(III) குளோரைடுடன் 650 பாகை செல்சியசு வெப்பநிலையில் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்தும் ஒடுக்க வினைக்குப் பின் நியோடிமியம்(II) குளோரைடு தயாரிக்கலாம்.:[2]
- 2 NdCl3 + Nd → 3 NdCl2
கட்டமைப்பு
தொகுPbCl2 சேர்மத்தின் காட்டுனைட்டு கட்டமைப்பை நியோடிமியம்(II) குளோரைடு ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு Nd2+ அயனியும் குளோரின் எதிர்மின் அயனிகளால் மூவுச்சி முக்கோணப் பட்டக ஒழுங்கமைப்பில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏழு Nd-Cl பிணைப்பு இடைவெளிகள் 2.95-3.14 Å என்ற அளவிலும் இரண்டு பிணைப்புகள் 3.45 Å. நீளமும் கொண்டவையாக பிணைந்துள்ளன.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Brauer, Georg; Baudler, Marianne (1975). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
- ↑ Gerd Meyer, Lester R. Morss (1991). Synthesis of lanthanide and actinide compounds. Springer. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-1018-7.
- ↑ Meyer, Gerd; Schleid, Thomas (1985). "Zweiwertiges Neodym: NdCl2 und KNd2Cl5". Z. anorg. allg. Chem. 528 (9): 55–60. doi:10.1002/zaac.19855280906.
- ↑ "ICSD Entry: 48206". Cambridge Structural Database: Access Structures. Cambridge Crystallographic Data Centre. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.