சமாரியம்(II) குளோரைடு

வேதிச் சேர்மம்

சமாரியம்(II) குளோரைடு (Samarium(II) chloride) என்பது SmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கீட்டோன்-நடுநிலை வகிக்கிகும் உள்ளிழுத்தல் வினையில் உருபு உற்பத்தி செய்யும் முகவராக சமாரியம்(II) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.

சமாரியம்(II) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சமாரியம்(II) குளோரைடு
வேறு பெயர்கள்
சமாரியம் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
13874-75-4 N
ChemSpider 4908199 Y
EC number 237-631-8
InChI
  • InChI=1S/2ClH.Sm/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: VPRJMFJPKMESHB-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2ClH.Sm/h2*1H;/q;;+2/p-2
    Key: VPRJMFJPKMESHB-NUQVWONBAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6393953
SMILES
  • Cl[Sm]Cl
பண்புகள்
SmCl2
வாய்ப்பாட்டு எடை 221.27 கி/மோல்
தோற்றம் அடர் பழுப்பு படிகங்கள்[1]
அடர்த்தி 3.69 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 855 °C (1,571 °F; 1,128 K)
கொதிநிலை 1,310 °C (2,390 °F; 1,580 K)
?
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pbnm, No. 62[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சமாரியம்(II) புரோமைடு
சமாரியம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

சமாரியம்(III) குளோரைடை சமாரியம் உலோகத்துடன் சேர்த்து வெற்றிடத்தில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்க வினைக்கு உட்படுத்துவது அல்லது ஐதரசன் வாயுவுடன் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைப்படுத்துவது போன்ற முறைகளில் சமாரியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. :[1]

2 SmCl3 + Sm → 3 SmCl2
2 SmCl3 + H2 → 2 SmCl2 + 2 HCl

சமாரியம்(III) குளோரைடை இலித்தியம் உலோகம் அல்லது நாப்தலீனில் உள்ள டெட்ரா ஐதரோ பியூரான் உடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் சமாரியம்(II) குளோரைடை தயாரிக்க முடியும். :[3]

SmCl3 + Li → SmCl2 + LiCl

சோடியம் உலோகத்துடனும் இதைப் போன்றதொரு வினையே நிகழ்கிறது. [2]

கட்டமைப்பு தொகு

சமாரியம்(II) குளோரைடு PbCl2 (காட்டுணைட்டு) கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Brauer, Georg; Baudler, Marianne (1975). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-432-02328-6. 
  2. 2.0 2.1 2.2 Meyer, Gerd; Schleid, Thomas (1986-02-01). "The metallothermic reduction of several rare-earth trichlorides with lithium and sodium". Journal of the Less Common Metals 116 (1): 187–197. doi:10.1016/0022-5088(86)90228-6. 
  3. Rossmainth, Kurt (1979-01-01). "Herstellung der klassischen Seltenerd(II)-chloride in Lösung". Anorganische, Struktur- und Physikalische Chemie 110 (4): 109–114. doi:10.1007/BF00903752. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(II)_குளோரைடு&oldid=3349822" இலிருந்து மீள்விக்கப்பட்டது