கூட்டு வினை
கரிம வேதியியலில் கூட்டுவினை (addition reaction) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரிய கூட்டுப்பொருளை உருவாக்கும் எளிய வேதிவினையாகும்[1][2]
வேதிச்சேர்மங்களில் நடைபெறும் கூட்டுவினைகள் அவற்றிலுள்ள பல்வகையான வேதியியற் பிணைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆல்க்கீன்களில் உள்ள கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்புகள் அல்லது ஆல்க்கைன்களில் உள்ள முப்பிணைப்புகள் இதற்கு உதாரணமாகும். கார்பன் – பல்லின இரட்டைப் பிணைப்பு மூலக்கூறு வகை சேர்மங்களான கார்பனைல் (C=O) அல்லது இமைன் (C=N) தொகுதிகளும் இரட்டைப் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்களைப் போலவே கூட்டுவினைகளில் ஈடுபட முடிகிறது.
கூட்டுவினை என்பது நீக்கல் வினைக்கு எதிராக நிகழும் வேதிவினையாகும். எடுத்துக்காட்டாக, ஒர் ஆல்க்கீனின் நீரேற்ற வினை மற்றும் ஓர் ஆல்ககாலின் நீர்நீக்கல் வினை இரண்டும் கூட்டு - நீக்கல் வினை இரட்டைகளாக உள்ளன.
இரண்டு முக்கியமான முனைவு கூட்டு வினைகள் நிகழ்கின்றன. அவை, 1. எலக்ட்ரான் கவர் கூட்டுவினை, 2. கருகவர் கூட்டுவினை என்பனவாகும். இவ்வாறே தனிஉறுப்பு கூட்டுவினை மற்றும் வளையக்கூட்டுவினை முதலிய இரண்டு முனைவற்ற கூட்டுவினைகளும் கரிமவேதியியலில் நிகழ்கின்றன. மேலும், பல்லுறுப்பாக்கல் போன்ற வினைகளிலும் பலபடி கூட்டுவினைகளாக இவ்வகை வினைகள் இடம்பெறுகின்றன.
கூட்டு – நீக்கல் வினைகள்
தொகுகூட்டுவினையுடன் தொடர்புடைய கூட்டு – நீக்கல் வினைகளில் ஓர் கூட்டுவினையைத் தொடர்ந்து ஒரு நீக்கல் வினையும் நிகழ்கிறது. பெரும்பாலான கூட்டுவினைகள் கார்பனைல் சேர்மங்களுடன் மின்னணு மிகுபொருட்கள் கூடுவதால் நிகழ்கின்றன. இவ்வகையான வினைகள் கருநாட்ட அசைல் பதிலீட்டு வினைகள் எனப்படுகின்றன[3].
ஒர் அலிபாட்டிக் அமீன் இமைனாக மாறுவது மற்றும் அரோமாட்டிக் அமீன் ஆல்கைலமினோ டிஆக்சோ இருபதிலீட்டு வினையில் சிகிப் காரமாகும் வினையும் கூட்டு – நீக்கல் வினையேயாகும். நைட்ரைல்கள் நீராற்பகுத்தல் மூலம் கார்பாக்சிலிக் அமிலங்களாவதும் ஒருவகையான கூட்டு – நீக்கல் வினையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Morrison, R. T.; Boyd, R. N. (1983). Organic Chemistry (4th ed.). Boston: Allyn and Bacon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-05838-8.
- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
- ↑ Reaction-Map of Organic Chemistry Murov, Steven. J. Chem. Educ. 2007, 84, 1224 Abstract