நைட்ரைல் (Nitryl) என்பது நைட்ரசன் ஈராக்சைடின் ஒரு பகுதிக்கூறாகும். ஒரு பெரிய சேர்மத்தில் ஓர் ஒற்றைப் பிணைப்புத் துண்டாக தோன்றும் போது இவ்வாறு பகுதிக்கூறாக தெரிகிறது. நைட்ரைல் புளோரைடும் (NO2F) நைட்ரைல் குளோரைடும் இதற்குரிய எடுத்துக்காட்டுகளில் சிலவாகும்.[1]

நைட்ரசன் ஈராக்சைடு

நைட்ரசன் டை ஆக்சைடு போலவே நைட்ரைல் பகுதிக்கூறிலும் நைட்ரசன் அணு இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் இரண்டு பிணைப்புகளால் பிணைந்துள்ளது. மூன்றாவது பிணைப்பு நைட்ரசன் மற்றும் இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்கிறது. நைட்ரசனை மையமாகக் கொண்ட அடிப்படைக்கூறு பின்னர் மற்றொரு ஒற்றை இணைதிற துண்டுடன் ஒரு N−X பிணைப்பை உருவாக்க ஏதுவாக தனித்துள்ளது. இங்குள்ள X குறியீடானது புளோரைடு, குளோரைடு, ஐதராக்சைடு என எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

கரிமச் சேர்மங்களுக்கான பெயரிடலில் நைட்ரைல் பகுதிக்கூறு நைட்ரோ தொகுதி என அழைக்கப்படுகிறது. உதாரணமாக நைட்ரைல் பென்சீன் என்பது பொதுவாக நைட்ரோபென்சீன் என்று அழைக்கப்படுகிறது.[2]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclature of Inorganic Chemistry IUPAC Recommendations 2005 (PDF). IUPAC. 2005. Archived from the original (PDF) on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
  2. International Union of Pure and Applied Chemistry, Commission on the Nomenclature of Organic Chemistry (1993). A guide to IUPAC nomenclature of organic compounds: Recommendations 1993. Panico, Robert; Powell, Warren H.; Richer, Jean-Claude. Oxford: Blackwell Scientific Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0632037024. இணையக் கணினி நூலக மைய எண் 27431284.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரைல்&oldid=4113617" இலிருந்து மீள்விக்கப்பட்டது