தாலியம்(I) குளோரைடு

வேதிச் சேர்மம்

தாலியம்(I) குளோரைடு (Thallium(I) chloride) என்பது TlCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலசு குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நிறமற்ற இந்த உப்பு தாலியத்தை அதன் தாதுக்களில் இருந்து தனிமைப்படுத்தி தயாரிக்கும் செயல்முறையில் ஓர் இடைநிலையாக உருவாகிறது. பொதுவாக, தாலியம்(I) சல்பேட்டின் அமிலக் கரைசலை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் கரையாத தாலியம்(I) குளோரைடு உருவாகும். இந்த திண்மப் பொருளானது சீசியம் குளோரைடு என்ற சேர்மத்தின் படிக அமைப்பின் மையக்கருவில் படிகமாக்குகிறது.[5]

தாலியம்(I) குளோரைடு
Thallium(I) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
தாலியம் மோனோகுளோரைடு
தாலியம்(I) குளோரைடு
வேறு பெயர்கள்
தாலசு குளோரைடு
இனங்காட்டிகள்
7791-12-0 Y
ChEBI CHEBI:37117 Y
ChemSpider 23044 Y
DrugBank DB09316
EC number 232-241-4
InChI
 • InChI=1S/ClH.Tl/h1H;/q;+1/p-1 Y
  Key: GBECUEIQVRDUKB-UHFFFAOYSA-M Y
 • InChI=1/ClH.Tl/h1H;/q;+1/p-1
  Key: GBECUEIQVRDUKB-REWHXWOFAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24642
 • Cl[Tl]
UNII 37CB58V15B Y
UN number 2811 1707
பண்புகள்
TlCl
வாய்ப்பாட்டு எடை 239.836 கி/மோல்[1]
தோற்றம் வெண்மை,நெடியற்ற படிகத் திண்மம்[1]
அடர்த்தி 7.0 கி/செ.மீ3[1]
உருகுநிலை 431 °C (808 °F; 704 K)[1]
கொதிநிலை 720 °C (1,328 °F; 993 K)[1]
3.3 கி/லி (25 °செல்சியசு)[1]
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது.[1]
−57.8·10−6 செ.மீ3/மோல்[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.247 (0.59 µm)
2.198 (0.75 µm)
2.145 (1 µm)
1.891 (5 µm)
2.193 (20 µm)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு சீசியம் குளோரைடு, cP2
புறவெளித் தொகுதி Pm3m, No. 221[4]
Lattice constant a = 0.38416 நானோமீட்டர்
ஒருங்கிணைவு
வடிவியல்
Cubic (Tl+)
Cubic (Cl)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் http://www.crystran.co.uk/uploads/files/178.pdf
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H300, H330, H373, H411
P260, P264, P270, P271, P273, P284, P301+310, P304+340, P310, P314, P320, P321, P330, P391
Lethal dose or concentration (LD, LC):
24 மி.கி/கி.கி, வாய்வழி, சுண்டெலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாலியம்(I) புளோரைடு
தாலியம்(I) புரோமைடு
தாலியம்(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தாலியம்(III) குளோரைடு
வெள்ளி குளோரைடு
ஈயம்(II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாலியம்(I) குளோரைடின் குறைந்த கரைதிறன் இரசாயனங்கள் தயாரிக்கும் செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டுடன் உலோக குளோரைடு அணைவுச் சேர்மங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் தொடர்புடைய உலோக அறுபாசுப்பேட்டு வழிப்பெறுதிகள் உருவாகின்றன. இதன் விளைவாக வீழ்படிவாகும் தாலியம்(I) குளோரைடு வினை விளைபொருள் கலவையை வடிகட்டுவதன் மூலம் பிரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்த வினையானது AgPF6 இன் பயன்பாட்டைப் போலவே உள்ளது. தவிர Tl+ இன் ஆக்சிசனேற்றம் இவ்வினையில் குறைவாக உள்ளது.

அறை வெப்பநிலையில் தாலியம்(I) குளோரைடின் படிக அமைப்பு கனசதுர சீசியம் குளோரைடு வகை படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது குளிர்விக்கப்படும்போது நேர்ச்சாய்சதுர தாலியம் அயோடைடு படிக வகைக்கு மாறுகிறது. இந்த நிலை மாறுதல் வெப்பநிலை கலந்துள்ள அசுத்தங்களால் பாதிக்கப்படலாம்.[6] KBr அடி மூலக்கூறுகளில் வளர்க்கப்படும் நானோமீட்டர் அளவிலான மெல்லிய தாலியம்(I) குளோரைடு படலங்கள் ஒரு பாறை உப்பு கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் மைக்கா அல்லது சோடியம் குளோரைடு மீது படியும் படலங்கள் வழக்கமான CsCl வகையைச் சேர்ந்தவையாக உள்ளன.[7]

மிகவும் அரிதான கனிமமான லாஃபோசைட்டு Tl(Cl,Br), தாலியம்(I) குளோரைடின் இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாகும்.[8]

அனைத்து தாலியம் சேர்மங்களைப் போலவே தாலியம்(I) குளோரைடும் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக காணப்படுகிறது. இருப்பினும் இதன் குறைந்த கரைதிறன் நச்சுத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது.[9]

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haynes, p. 4.94
 2. Haynes, p. 4.135
 3. Haynes, p. 10.242
 4. Müürsepp, T.; Haav, A. (1974). "X-ray diffraction study of the systems TlI-CsI, TlI-RbI, and TlI-Tl Cl". Physica Status Solidi A 21 (2): K81. doi:10.1002/pssa.2210210251. Bibcode: 1974PSSAR..21...81M. 
 5. Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry. Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
 6. Blackman, M; Khan, I H (1961). "The Polymorphism of Thallium and Other Halides at Low Temperatures". Proceedings of the Physical Society 77 (2): 471. doi:10.1088/0370-1328/77/2/331. Bibcode: 1961PPS....77..471B. 
 7. Schulz, L. G. (1951). "Polymorphism of cesium and thallium halides". Acta Crystallographica 4 (6): 487–489. doi:10.1107/S0365110X51001641. 
 8. Lafossaite. Mindat.org
 9. Thallium Chloride Material Safety Data Sheet. espimetals.com

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_குளோரைடு&oldid=3790964" இலிருந்து மீள்விக்கப்பட்டது