எர்பியம்(III) குளோரைடு
எர்பியம்(III) குளோரைடு (Erbium(III) chloride) என்பது ErCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஊதா நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எர்பியம் உலோகத்தை தயாரிக்கப் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எர்பியம்(III) குளோரைடு
| |
வேறு பெயர்கள்
எர்பியம் டிரைகுளோரைடு, எர்பியம் முக்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10138-41-7 (நீரிலி) | |
ChemSpider | 59656 |
EC number | 233-385-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66277 |
| |
UNII | 867J5QOF46 |
பண்புகள் | |
ErCl3 (நீரிலி) ErCl3·6H2O (அறுநீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 273.62 கி/மோல் (நீரிலி) 381.71 கி/மோல் (அறுநீரேற்று) |
தோற்றம் | ஊதா நீர் உறிஞ்சும் திறன் ஒற்றைச்சரிவச்சுப் படிகங்கள் (நீரிலி) இளஞ்சிவப்பு நீர் உறிஞ்சும் திறன் படிகங்கள் (அறுநீரேற்று) |
அடர்த்தி | 4.1 கி/செ.மீ3 (நீரிலி) |
உருகுநிலை | 776 °C (1,429 °F; 1,049 K) (நீரிலி) சிதைவடையும் (அறுநீரேற்று) |
கொதிநிலை | 1,500 °C (2,730 °F; 1,770 K) |
கரையும் நீர் (நீரிலி) சிறிதளவு கரையும் எத்தனால் (அறுநீரேற்று)[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
புறவெளித் தொகுதி | C2/m, எண். 12 |
Lattice constant | a = 6.80 Å, b = 11.79 Å, c = 6.39 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | எர்பியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஓல்மியம்(III) குளோரைடு, தூலியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅம்மோனியம் குளோரைடு பாதையில் நீரற்ற எர்பியம்(III) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2][3][4] முதல் படிநிலையில் எர்பியம்(III) ஆக்சைடு அம்மோனியம் குளோரைடுடன் சேர்த்து சூடேற்றப்படுகிறது. இவ்வினையில் அம்மோனியம் உப்பின் பெண்டாகுளோரைடு உருவாகிறது.
- Er2O3 + 10[NH4]Cl → 2 [NH4]2ErCl5 + 6H2O + 6 NH3
இரண்டாவது கட்டத்தில், அம்மோனியம் குளோரைடு உப்பு 350-400 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடாக்குவதன் மூலம் முக்குளோரைடாக மாற்றப்படுகிறது:
- [NH4]2ErCl5 → ErCl3 + 2 HCl + 2 NH3
கட்டமைப்பு
தொகுஎர்பியம்(III) குளோரைடு AlCl3 வகை படிகங்களாக C2/m என்ற இடக்குழுவுடன் ஒற்றைச் சரிவச்சு படிகக்கட்டமைப்பில் உருவாகிறது.[5] P2/n (P2/c) - C42h. என்ற இடக்குழுவில் ஒற்றைச் சரிவச்சு படிகக்கட்டமைப்பில் எர்பியம்(III) குளோரைடின் அறுநீரேற்று படிகமாகிறது. இச்சேர்மத்தில் எர்பியம் எண்முக ஒருங்கிணைப்பில் [Er(H2O)6Cl2]+ அயனிகளை உருவாக்குகிறது. தனிமைப்படுத்தப்பட்ட Cl− கட்டமைப்பை நிறைவு செய்கிறது.[6]
வினையூக்கப் பண்புகள்
தொகுஎர்பியம்(III) குளோரைடை ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்துவது, ஆல்ககால்கள் மற்றும் பீனால்களின் அசைலேற்ற வினை [7] மற்றும் பர்ஃபுரலின் அமீனாக்கச் செயல்பாட்டிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.[8] இது பிரீடெல்-கிராப்ட்சு-வகை வினைகளுக்கு ஒரு ஊக்கியாக உள்ளது, மேலும் லூச் குறைப்பு வினையில் சீரியம்(III) குளோரைடுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). வேதியியல் மற்றும் இயற்பியல் கையேடு (87 ed.). போகா ரேடான், புளோரிடா: CRC Press. pp. 4–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Brauer, G., ed. (1963). Handbook of Preparative Inorganic Chemistry (2nd ed.). New York: Academic Press.
- ↑ Meyer, G. (1989). "The Ammonium Chloride Route to Anhydrous Rare Earth Chlorides—The Example of Ycl 3". The Ammonium Chloride Route to Anhydrous Rare Earth Chlorides-The Example of YCl3. Inorganic Syntheses. Vol. 25. pp. 146–150. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132562.ch35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13256-2.
- ↑ Edelmann, F. T.; Poremba, P. (1997). Herrmann, W. A. (ed.). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry. Vol. VI. Stuttgart: Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-103021-4.
- ↑ "The Crystal Structure of Yttrium Trichloride and Similar Compounds". J Phys Chem 58 (11): 940–943. 1954. doi:10.1021/j150521a002.
- ↑ "Crystallographic data for solvated rare earth chlorides". Acta Crystallographica 21 (6): 1012–1013. 1966. doi:10.1107/S0365110X66004420.
- ↑ Dalpozzo Renato, De Nino Antonio, Maiuolo Loredana, Oliverio Manuela, Procopio Antonio, Russo Beatrice, Tocci Amedeo (2007) Erbium(iii) Chloride: a Very Active Acylation Catalyst. Australian Journal of Chemistry 60, 75-79. எஆசு:10.1071/CH06346
- ↑ Synthesis of trans-4,5-Bis-dibenzylaminocyclopent-2-enone from Furfural Catalyzed by ErCl3·6H2O Mónica S. Estevão, Ricardo J. V. Martins, and Carlos A. M. Afonso Journal of Chemical Education 2017 94 (10), 1587-1589 {DOI|10.1021/acs.jchemed.6b00470}
- ↑ Luche, Jean-Louis (2001-04-15), "Erbium(III) Chloride", in John Wiley & Sons, Ltd (ed.), Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), Chichester, UK: John Wiley & Sons, Ltd, pp. re006, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289x.re006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7