நையோபியம்(V) குளோரைடு

நையோபியம்(V) குளோரைடு (Niobium(V) chloride) என்பது NbCl5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் பெண்டாகுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் காணப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. காற்றில் நீராற்பகுப்பிற்கு உட்படுகிறது. நையோபியம்(V) குளோரைடு மாதிரிகள் பெரும்பாலும் சிறிய அளவு NbOCl3 கலந்து மாசுடனேயே இருக்கின்றன. பெரும்பாலும் நையோபியத்தின் மற்ற சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. NbCl5 பதங்கமாதல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.

நையோபியம்(V) குளோரைடு
Niobium(V) chloride
நையோபியம்(V) குளோரைடு மாதிரி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
நையோபியம்(V) குளோரைடு
நையோபியம் பெண்டாகுளோரைடு
இனங்காட்டிகள்
10026-12-7 NbCl5 Y[chemspider]
ChemSpider 23203
EC number 233-059-8
InChI
  • InChI=1S/5ClH.Nb/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: YHBDIEWMOMLKOO-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
Image

இருபடிச் சேர்மம்

பப்கெம் 24818
வே.ந.வி.ப எண் QU0350000
UNII 9S1BC7865F Y
பண்புகள்
NbCl5
வாய்ப்பாட்டு எடை 270.17 கி/மோல்
தோற்றம் மஞ்சள் ஒற்றைச்சரிவு படிகங்கள்
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 2.75 கி/செ.மீ3
உருகுநிலை 204.7 °C (400.5 °F; 477.8 K)
கொதிநிலை 248.2 °C (478.8 °F; 521.3 K)
சிதைவடையும்
கரைதிறன் HCl, குளோரோபாரம், CCl4
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-797.47 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
214.05 J K−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H312, H314, H332
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நையோபியம்(V) புளோரைடு
நையோபியம்(V) புரோமைடு
நையோபியம் ஐந்தயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வனேடியம் நாற்குளோரைடு
தாண்டலம் ஐங்குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு
 
நையோபியம் பெண்டார்குளோரைடின் நீர்மமும் ஆவியும்.

தொழில்துறை ரீதியாக நையோபியம்(V) குளோரைடை 300 முதல் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் நையோபியம் உலோகத்தை நேரடியாக குளோரினேற்றம் செய்து தயாரிக்கிறார்கள்:[1]

2Nb + 5Cl2 → 2NbCl5

ஆய்வகத்தில் பெரும்பாலும் நையோபியம் பெண்டாக்சைடு சேர்மத்திலிந்து நையோபியம் பெண்டாகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. இத்தயாரிப்பு முறையிலுள்ள முக்கிய சவால் முற்றுப்பெறாத வினையினால் உடன் விளைபொருளாக நையோபியம் ஆக்சிகுளோரைடு உருவாவதாகும். இதை தயோனைல் குளோரைடைப் பயன்படுத்தி நையோபியம் பெண்டாகுளோரைடாக மாற்றிக்கொள்ளலாம்.:[2] 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பன் முன்னிலையில் நையோபியம் பெண்டாக்சைடை குளோரினேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.

கட்டமைப்பு

தொகு
 
நையோபியம் பெண்டாகுளோரைடின் பந்து-குச்சி மாதிரி

நையோபியம் பெண்டாகுளோரைடு திண்ம நிலையில் குளோரோ-பாலங்கள் கொண்ட இருபடிகளாக உருவாகிறது (படம்). ஒவ்வொரு நையோபியம் மையமும் ஆறு ஒருங்கிணைப்புகளை கொண்டுள்ளன. ஆனால் எண்முக ஒருங்கிணைப்பு கணிசமாக சிதைந்திருக்கும். நடுவரையில் நையோபியம்-குளோரின் பிணைப்பின், பிணைப்பு நீளம் 225 பைக்கோமீட்டர்களாகவும் (விளிம்பு) மற்றும் பாலத்தில் 256 பைக்கோமீட்டர்களாவும் அச்சில் உள்ள நையோபியம்-குளோரின் பிணைப்பு 229.2 பைக்கோமீட்டர்களாவும் காணப்படும். மூலக்கூறின் நடுவரை சமதளத்துடன் 83.7° கோணத்தை உருவாக்குவதற்காக உள்நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளது. பாலத்தில் உள்ள Nb–Cl–Nb பிணைப்பின் பிணைப்புக் கோணம் 101.3° ஆகவும், நையோபியம்-நையோபியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 398.8 பைக்கோமீட்டர்களாகவும் உள்ளது. இந்த நீளம் எந்தவொரு உலோக-உலோக தொடர்பையும் விட மிக நீண்டதாகும்.[3] NbBr5, NbI5, TaCl5 TaBr5 மற்றும் TaI5 ஆகியவை NbCl5 உடன் சமகட்ட்மைப்பை கொண்டவையாக உள்ளன.

பயன்கள்

தொகு

நையோபியம்(V) குளோரைடு நையோபியத்தின் ஆல்காக்சைடுகள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முக்கிய முன்னோடியாகும். திண்ம-கூழ்ம செயலாக்கத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கரிமநையோபியம் சேர்மங்கள் உட்பட பல Nb-உலோகத்தை கொண்ட வினையாக்கிகளுக்கும் இது முன்னோடிச் சேர்மமாகும்.

கரிமத் தொகுப்பு வினைகளில் கார்போனைல்-ஈன் வினை மற்றும் டையீல்சு-ஆல்டர் வினைக்கான ஆல்க்கீன்களை செயல்படுத்துவதில் NbCl5 மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு லூயிசு அமிலமாகச் செயல்படுகிறது. நையோபியம் குளோரைடும் சில பைரோலிடின்களில் இருந்து என்-அசிலிமினியம் சேர்மங்களை உருவாக்குகிறது. இவை அல்லைல்மெத்தில்சிலில், இண்டோல் அல்லது பென்சோபீனோனின் சிலில் ஈனால் ஈதர் போன்ற கருகவர் காரணிகளுக்கு அடிமூலக்கூறுகளாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Joachim Eckert (2005). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30673-0. 
  2. Brown, D. (1957). "Niobium(V) Chloride and Hexachloroniobates(V)". Inorganic Syntheses. Vol. 9. pp. 88–92. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132401.ch24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13240-1.
  3. Cotton, F.A., P. A. Kibala, M. Matusz and R. B. W. Sandor (1991). "Structure of the Second Polymorph of Niobium Pentachloride". Acta Crystallogr. C 47 (11): 2435–2437. doi:10.1107/S0108270191000239. 
  4. Andrade, C. K. Z.; Rocha, R. O.; Russowsky, D.; Godoy, M. N. (2005). "Studies on the Niobium Pentachloride-Mediated Nucleophilic Additions to an Enantiopure Cyclic N-acyliminium Ion Derived from (S)-malic acid". J. Braz. Chem. Soc. 16 (3b): 535–539. doi:10.1590/S0103-50532005000400007. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்(V)_குளோரைடு&oldid=3952893" இலிருந்து மீள்விக்கப்பட்டது