மாங்கனீசு(II) குளோரைடு

மாங்கனீசு(II) குளோரைடு (Manganese(II) chloride)  MnCl2(H2O)x என்ற பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய சேர்மங்களின் தொடரைக் குறிக்கிறது. இதில் x மதிப்பானது 0, 2, அல்லது 4 ஆக இருக்கலாம். டெட்ராஐதரேட்டானது "மாங்கனீசு(II) குளோரைடின்" மிகப் பொதுவான வடிவமாக உள்ளது. டெட்ராஐதரேட்டின் மூலக்கூறு வாயப்பாடானது MnCl2·4H2O ஆகும். நீரற்ற வடிவம் மற்றும் டைஐதரேட்டு வடிவம்   MnCl2·2H2O ஆகியவையும் கூட அறியப்பட்டவையாகும். பல Mn(II) சேர்மங்களைப் போல, இந்த உப்புக்கள் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டவையாக உள்ளன. வெளிர் நிறங்கள் இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மீசுழற்சி  d5 அமைப்பின் பண்பாகும்[2]

மாங்கனீசு(II) குளோரைடு

மூலக்கூற்று அமைப்பு

டெட்ராஐதரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
மாங்கனீசு(II) குளோரைடு
மாங்கனீசு டைகுளோரைடு
வேறு பெயர்கள்
மாங்கனசு குளோரைடு
மாங்கனீசின் ஐப்பர்குளோரைடு
இனங்காட்டிகள்
7773-01-5 Y
38639-72-4 (டைஐதரேட்டு) Y
13446-34-9 (டெட்ராஐதரேட்டு) Y
ChEMBL ChEMBL1200693 N
ChemSpider 22888 Y
InChI
 • InChI=1S/2ClH.Mn/h2*1H;/q;;+2/p-2 Y
  Key: GLFNIEUTAYBVOC-UHFFFAOYSA-L Y
 • InChI=1S/2ClH.Mn/h2*1H;/q;;+2/p-2
  Key: GLFNIEUTAYBVOC-NUQVWONBAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24480
வே.ந.வி.ப எண் OO9625000
 • Cl[Mn]Cl
UNII 6YB4901Y90 Y
பண்புகள்
MnCl2
வாய்ப்பாட்டு எடை 125.844 கி/மோல் (நீரற்ற)
161.874 கி/மோல் (டைஐதரேட்டு)
197.91 கி/மோல் (டெட்ராஐதரேட்டு)
தோற்றம் இளஞ்சிவப்பு திண்மம் (டெட்ராஐதரேட்டு)
அடர்த்தி 2.977 கி/செமீ3 (நீரற்ற)
2.27 கி/செமீ3 (டைஐதரேட்டு)
2.01 கி/செமீ3 (டெட்ராஐதரேட்டு)
உருகுநிலை 654 °C (1,209 °F; 927 K) (நீரற்ற)
டைஐதரேட்டு 135 °செ இல் நீர் நீக்க வினை நடைபெறுகிறது
டெட்ராஐதரேட்டு 58 °C இல் நீர் நீக்க வினை நடைபெறுகிறது
கொதிநிலை 1,225 °C (2,237 °F; 1,498 K)
63.4 கி/100 மிலீ (0 °செ)
73.9 கி/100 மிலீ (20 °செ)
88.5 கி/100 மிலீ (40 °செ)
123.8 கி/100 மிலீ (100 °செ)
கரைதிறன் பிரிடீனில் மிதமாகக் கரையும், எத்தனாலில் எளிதில் கரையும்
ஈதரில் கரையாது
+14,350·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு CdCl2
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகி
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
250-275 மிகி/கிகி (rat, oral)
1715 மிகி/கிகி (mouse, oral)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
மாங்கனீசு(II) புரோமைடு
மாங்கனீசு(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(III) குளோரைடு
டெக்னீசியம்(IV) குளோரைடு
இரேனியம்(III) குளோரைடு
இரேனியம்(IV) குளோரைடு
இரேனியம்(V) குளோரைடு
இரேனியம்(VI) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

மாங்கனீசு குளோரைடானது மாங்கனீசு(IV) ஆக்சைடை அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதால் பெறப்படுகிறது.

MnO2 + 4 HCl → MnCl2 + 2 H2O + Cl2

இந்த வினையானது முன்னர் குளோரினின் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் கிடைக்கும் கரைசலைக் கவனமாக  மாங்கனீசு கார்பனேட்டுடன் (MnCO3) நடுநிலையாக்கலை நிகழ்த்துவதன் மூலமாக மாங்கனீசு டைஆக்சைடின் பொதுவான மாசுகளான இரும்பின் உப்புக்களைத் தெரிவு செய்து  வீழ்படிவாக்கலாம்.[3]

 
நீரற்ற மாங்கனீசு குளோரைடின் மாதிரி

ஆய்வகத்தில், மாங்கனீசு குளோரைடானது மாங்கனீசு உலோகத்துடன் அல்லது மாங்கனீசு கார்பனேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

Mn + 2 HCl + 4 H2O → MnCl2(H2O)4 + H2
MnCO3 + 2 HCl + 3 H2O → MnCl2(H2O)4 + CO2

அமைப்பு தொகு

நீரற்ற மாங்கனீசு குளோரைடு (MnCl2), படலங்களை உடைய காட்மியம் குளோரைடு-போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. டெட்ராஐதரேட்டு எண்முகி  ஒரு பக்க-Mn(H2O)4Cl2 மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. சிற்றுறுதியான சமநிலையை உடைய மறுபக்க மாற்றியமும் காணப்படுகிறது.[4][5] டைஐதரேட்டு MnCl2(H2O)2  ஒரு அணைவுப் பலபடியாக உள்ளது.  ஒவ்வொரு Mn மைய அணுவும் நான்கு (இரட்டைப் பாலமாக இணைக்கும்) குளோரைடு ஈனிகளுடன்  இணைக்கப்பட்டுள்ளது.  எண்முகியானது ஓரிணை ஒன்றுக்கொன்று மறுபக்க மாற்றியமாக அமையும் நீர் ஈனிகளால் முழுமையடைகிறது.[6]

 
MnCl2(H2O)2 படிகத்தின் துணை அலகு.

வேதிப்பண்புகள் தொகு

ஐதரேட்டுகள் நீரில் கரைந்து மிதமான அமிலக் கரைசல்களைத் (pH மதிப்பு 4 ஐச் சுற்றிலும் உடைய) தருகின்றன. இந்தக் கரைசல்கள் உலோக நீர் அணைவு சேர்மங்களைக் கொண்டவையாக[Mn(H2O)6]2+உள்ளன.

இச்சேர்மம் ஒரு வலிமை குறைந்த லுாயி அமிலமாகும். இது குளோரைடு அயனிகளுடன் வினைபுரிந்து பின்வரும் அயனிகளை [MnCl3], [MnCl4]2−, and [MnCl6]4− .உடைய திண்மச் சேர்மங்களின் தொடரைத் தருகின்றன.  [MnCl3] மற்றும் [MnCl4]2−  ஆகிய இரண்டுமே பலபடித்தன்மை உடையவை ஆகும்.

ஒரு வகை கரிம ஈனிகளுடனான வினையில், மாங்கனீசு(II) காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து Mn(III) அணைவுச்சேர்மங்களைத் தருகிறது. உதாரணமாக [Mn(EDTA)], [Mn(cyanide|CN)6]3−, மற்றும் [Mn(acetylacetonate)3]. Ph3P ஒரு நிலையற்ற 2:1 கூட்டுப்பொருளை உருவாக்குகிறது:

MnCl2 + 2 Ph3P → [MnCl2(Ph3P)2]

நீரற்ற மாங்கனீசு(II) குளோரைடானது பலவித மாங்கனீசு சேர்மங்களுக்கான தொகுப்பு முறைக்கு தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. உதாரணமாக, மாங்கனோசீனானது MnCl2 உடன் டெட்ராஐதரோபியூரானில் கரைக்கப்பட்ட சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு கரைசலுடன் வினைபுரிவதால் கிடைக்கிறது,

MnCl2 + 2 NaC5H5 → Mn(C5H5)2 + 2 NaCl

பயன்பாடுகள் தொகு

மாங்கனீசு குளோரைடானது முதன்மையாக, உலர் மின்கல அடுக்குகளின் உற்பத்தியில் பயன்படுகிறது. இது இடிப்பு எதிர்பொருளான மெதில்சைக்ளோபென்டாடையீனைல் மாங்கனீசு டிரைகார்போனைல் சேர்மத்தின் முன்னோடிச் சேர்மமாகவும் உள்ளது.

முன்னெச்சரிக்கை தொகு

நீண்ட காலத்திற்கு மாங்கனீசு துகள்கள் அல்லது மாங்கனீசு புகைக்கு வெளிப்படுத்தப்படுவதால், மாங்கனீசம், அல்லது மாங்கனீசு நச்சுக்கு உள்ளாகலாம்.

மேற்கோள்கள் தொகு

 1. "மாங்கனீசு சேர்மங்கள் (Mn)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
 2. N. N. Greenwood, A. Earnshaw, Chemistry of the Elements, 2nd ed., Butterworth-Heinemann, Oxford, UK, 1997.
 3. Reidies, Arno H. (2002), "Manganese Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_123, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30385-5 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help); More than one of |ISBN= and |isbn= specified (help).
 4. Zalkin, Allan; Forrester, J. D.; Templeton, David H. (1964). "Crystal structure of manganese dichloride tetrahydrate". Inorganic Chemistry 3: 529–33. doi:10.1021/ic50014a017. 
 5. A. F. Wells, Structural Inorganic Chemistry, 5th ed., Oxford University Press, Oxford, UK, 1984.
 6. Morosin, B.; Graeber, E. J. (1965). "Crystal structures of manganese(II) and iron(II) chloride dihydrate". Journal of Chemical Physics 42: 898–901. doi:10.1063/1.1696078. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II)_குளோரைடு&oldid=3951999" இலிருந்து மீள்விக்கப்பட்டது