தோரியம்(IV) குளோரைடு

தோரியம்(IV) குளோரைடு (Thorium(IV) chloride) என்பது ThCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் நீருறிஞ்சும் திறன் கொண்ட திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. நீரிலியான ThCl4 தவிர ThCl4(H2O)4 மற்றும் ThCl4(H2O)8 என்ற இரண்டு நீரேற்றுகளும் காணப்படுவதாக அறியப்படுகிறது[1] and ThCl4(H2O)8.[2]. இவ்வுப்புகளும் நீரில் கரையக்கூடியனவாகவும் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றன.

தோரியம்(IV) குளோரைடு
Thorium(IV) chloride
தோரியம்(IV) குளோரைடு படிக அமைப்பு
இனங்காட்டிகள்
10026-08-1 Y
InChI
  • InChI=1S/4ClH.Th/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66209
  • Cl[Th](Cl)(Cl)Cl
பண்புகள்
ThCl4
வாய்ப்பாட்டு எடை 373.849 கி/மோல்
தோற்றம் வெண்மை ஊசிகள்
நீருறிஞ்சி
அடர்த்தி 4.59 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 770 °C (1,420 °F; 1,040 K)
கொதிநிலை 921 °C (1,690 °F; 1,194 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நீரிலி தோரியம் நாற்குளோரைடு தயாரிப்பு மற்றும் அமைப்பு

தொகு

தோரியம் ஈராக்சைடை வெப்பக் கார்பனொடுக்க வினைக்கு உட்படுத்தி நீரிலி வடிவ தோரியம் நாற்குளோரைடைத் தயாரிக்கலாம்.

ThO2 + 2 C + 4 Cl2 → ThCl4 + 2 CO

நீரிலி வடிவ தோரியம் நாற்குளோரைடானது, 8- ஒருங்கிணைவுகளுடன் பன்னிருமுகவடிவு அமைப்பைக் கொண்டதாக உள்ளத[3]தோரியம் நாற்புரோமைடுடன் சமவடிவ அமைப்பையும் கொண்டுள்ளது.

நீரேற்று தோரியம் நாற்குளோரைடு தயாரிப்பு மற்றும் அமைப்பு

தொகு

தோரியம்(IV) ஐதராக்சைடுடன் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து வீழ்படிவாக்குதல் அல்லது ஆவியாக்கல்[2] மூலமாக எண்ம நீரேற்று வடிவ தோரியம்(IV) குளோரைடு தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. 100° செல்சியசு வெப்பநிலைக்கு இதை உலர்த்தி நான்கு நீரேற்றையும் தயாரிக்கலாம்[1].இவ்வகை சேர்மத்தின் வகைகள் எட்டு ஒருங்கிணைவு Th(IV) மையங்களாக ஊகித்துக் கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Cantat, Thibault; Scott, Brian L.; Kiplinger, Jaqueline L. "Convenient Access to the Anhydrous Thorium Tetrachloride Complexes ThCl4(DME)2, ThCl4(1,4-dioxane)2 and ThCl4(THF)3.5 using Commercially Available and Inexpensive Starting Materials" Chemical Communications 2010, 46, 919-921. எஆசு:10.1039/b923558b
  2. 2.0 2.1 P. Ehrlich "Titanium, Zirconium, Hafnium, and Thorium" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1203.
  3. R. C. L. Mooney: „The Crystal Structure oடுf ThCl4 and UCl4“, in: Acta Crystallographica, 1949, 2, S. 189–191 (எஆசு:10.1107/S0365110X49000485).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_குளோரைடு&oldid=3734727" இலிருந்து மீள்விக்கப்பட்டது