தங்குதன்(IV) குளோரைடு

வேதிச் சேர்மம்

தங்குதன்(IV) குளோரைடு (Tungsten(IV) chloride) என்பது WCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எதிர்காந்தப்பண்பு கொண்ட கருப்பு நிறத் திண்மமான இச்சேர்மம் ஓர் இரும தங்குதன் குளோரைடாக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

தங்குதன்(IV) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் நாற்குளோரைடு, தங்குதன் டெட்ராகுளோரைடு
இனங்காட்டிகள்
13470-13-8
ChemSpider 122991
EC number 629-145-3
InChI
  • InChI=1S/4ClH.W/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139468
SMILES
  • Cl[W](Cl)(Cl)Cl
பண்புகள்
Cl4W
வாய்ப்பாட்டு எடை 325.65 கி·மோல்−1
தோற்றம் கருப்பு திண்ம்மம்
அடர்த்தி 4.62 கி·செ.மீ−3
உருகுநிலை 450 °C (842 °F; 723 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H314
P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363, P405
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தங்குதன்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

WCl4 பொதுவாக தங்குதன் அறுகுளோரைடை குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு பாசுபரசு, தங்குதன் அறுகார்பனைல் , காலியம், வெள்ளீயம் மற்றும் ஆண்டிமனி உள்ளிட்ட பல தனிமங்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. கடைசியாகக் கூறப்பட்டுள்ள ஆண்டிமனி மிகவும் உகந்ததாகக் கூறப்படுகிறது.[1]

 

கட்டமைப்பு தொகு

பெரும்பாலான இரும உலோக ஆலைடுகளைப் போலவே தங்குதன்(IV) குளோரைடும் பல்லுருவத் தோற்றம் கொண்டதாகும். எண்முக வடிவத்தில் ஒவ்வொன்றும் தங்குதன் அணுக்களின் நேரியல் சங்கிலிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு W மையத்திலும் இணைக்கப்பட்டுள்ள ஆறு குளோரைடு ஈந்தணைவிகளில் நான்கு ஈந்தணைவிகள் பாலமமைக்கும் ஈந்தணைவிகளாகும். W-W பிணைப்புகள் ஒன்றையடுத்து ஒன்றென மாறி மாறி பிணைந்துள்ளன. பிணைந்துள்ளவை (2.688 Å) தூரத்திலும் பிணைக்கப்படாதவை 3.787 Å தொலைவிலும் உள்ளன.

வினைகள் தொகு

சோடியத்தைச் சேர்த்து தங்குதன்(IV) குளோரைடைக் குறைத்தல் வினைக்கு உட்படுத்தினால் இருதங்குதன்(III) எழுகுளோரைடு வழிப்பெறுதிகள் கிடைக்கின்றன:[2]

2 WCl4 + 5 thf + 2 Na → [Na(thf)3][W2Cl7(thf)2] + NaCl

மேற்கோள்கள் தொகு

  1. Zhou, Yibo; Kolesnichenko, Vladimir; Messerle, Louis (2014). "Crystalline and Amorphous Forms of Tungsten Tetrachloride". Inorganic Syntheses: Volume 36. Inorganic Syntheses. 36. பக். 30–34. doi:10.1002/9781118744994.ch6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118744994. 
  2. Broderick, Erin M.; Browne, Samuel C.; Johnson, Marc J. A. (2014). Dimolybdenum and Ditungsten Hexa(Alkoxides). Inorganic Syntheses. 36. பக். 95–102. doi:10.1002/9781118744994.ch18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118744994. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(IV)_குளோரைடு&oldid=3773221" இலிருந்து மீள்விக்கப்பட்டது