ஆர்சனிக் ஐங்குளோரைடு

ஆர்சனிக் ஐங்குளோரைடு (Arsenic pentachloride) என்பது AsCl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கும் குளோரினும்[2] சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இத்தயாரிப்பு முறையில் 105 பாகை செல்சியசு வெப்பநிலையில் திரவ குளோரினில் ஆர்சனிக் முக்குளோரைடு, AsCl3 புறஊதா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படுகிறது[3].

ஆர்சனிக் ஐங்குளோரைடு
Ball-and-stick model of a single molecule
Ball-and-stick model of the crystal structure
இனங்காட்டிகள்
22441-45-8 Y
பண்புகள்
AsCl5
வாய்ப்பாட்டு எடை 252.1866 கி/மோல்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1018] TWA 0.010 மி.கி/மி3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.002 மி.கி/மி3 [15-minute][1]
உடனடி அபாயம்
Ca [5 மி.கி/மி3 (as As)][1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஆர்சனிக் ஐங்குளோரைடு – 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. திட ஆர்சனிக் ஐங்குளோரைடின் கட்டமைப்பு இறுதியாக 2001 ஆம் ஆண்டில் உறுதிபடுத்தப்பட்டது[4] . பாசுபரசு ஐங்குளோரைடைப் போலவே இதுவும் முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு அமைப்பைப் பெற்றுள்ளது. தளவழிப் பிணைப்புகள் அச்சுப்பினைப்புகளைவிட நீளம் குறைவானவையாக உள்ளன. (As-Clதளம் = 210.6 பை.மீ 211.9 பை.மீ; As-Clஅச்சு= 220.7 பை.மீ).

தனிமவரிசை அட்டவணையின் 15 ஆவது தொகுதியில் ஆர்சனிக் தனிமத்திற்கு மேலும் கீழும் உள்ள ஐங்குளோரைடுகளான பாசுபரசு ஐங்குளோரைடும் ஆண்டிமனி ஐங்குளோரைடும் மிகுந்த நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். ஆனால் ஆர்சனிக் ஐங்குளோரைடின் நிலைப்புத்தன்மை முரண்பட்டதாக உள்ளது. தனிமங்களின் உட்கருவில் முழுமையடையாத எலக்ட்ரான் மற்றும் உட்கரு இடையிலான கவர்ச்சிவிசை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதல்வரிசை இடைநிலைத் தொடரில் தொடர்ந்து வரும் காலியம், செருமேனியம், ஆர்சனிக், செலீனியம் மற்றும் புரோமின் முதலியன தங்களுடைய 4s எலக்ட்ரான்களை உறுதிப்படுத்தும் நிலைக்குக் கொண்டுச்செல்ல வழிவகுக்கின்றன. இதனால் மேற்கோண்டு கூடுதல் பிணைப்புக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. இவ்விளைவு டி தொடர் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது. எப் தொடர் சுருக்கத்தைப் போலவே இருக்கும் இச்சுருக்கம் பொதுவாக இலந்தனைடு சுருக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0038". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. K. Seppelt (1976). "Arsenic Pentachloride, AsCl5". Angew. Chem. Int. Ed. Engl 15 (6): 377–378. doi:10.1002/anie.197603771. 
  4. Haupt S, Seppelt K, (2002). "Solid State Structures of AsCl5 and SbCl5". Zeitschrift für anorganische und allgemeine Chemie 628 (4): 729–734. doi:10.1002/1521-3749(200205)628:4<729::AID-ZAAC729>3.0.CO;2-E. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்_ஐங்குளோரைடு&oldid=2748483" இலிருந்து மீள்விக்கப்பட்டது