யூரோப்பியம்(III) குளோரைடு

யூரோப்பியம்(III) குளோரைடு (Europium(III) chloride) EuCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலிவகைச் சேர்மமான இது மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நீருறிஞ்சும் தன்மையுடன் இருப்பதால் இது விரைவாக தண்ணீரை ஈர்த்துக்கொண்டு வெண்மை நிற அறுநீரேற்றுப் படிகமாக (EuCl3•6H2O) உருவாகிறது. ஆய்வுக்காக இச்சேர்மம் பெரிதும் பயன்படுகிறது.

யூரோப்பியம்(III) குளோரைடு
Europium(III) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
யூரோப்பியம்(III) குளோரைடு
யூரோப்பியம் முக்குளோரைடு
யூரோப்பியம் டிரைகுளோரைடு
இனங்காட்டிகள்
10025-76-0 Y
13759-92-7 (அறுநீரேற்று) N
ChemSpider 23194 Y
EC number 233-040-4
InChI
  • InChI=1S/3ClH.Eu/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: NNMXSTWQJRPBJZ-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3ClH.Eu/h3*1H;/q;;;+3/p-3
    Key: NNMXSTWQJRPBJZ-DFZHHIFOAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24809
வே.ந.வி.ப எண் LE7525000
  • Cl[Eu](Cl)Cl
பண்புகள்
EuCl3
வாய்ப்பாட்டு எடை 258.323 கி/மோல்
366.41 கி/மோல் (அறுநீரேற்று)
உருகுநிலை 632 °C (1,170 °F; 905 K) சிதைவடையும்
மற்ற கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம் (UCl3 type), hP8
புறவெளித் தொகுதி P63/m, No. 176
ஒருங்கிணைவு
வடிவியல்
மூவுச்சி முக்கோணப் பட்டகம்
(ஒன்பது ஒருங்கிணைவுகள்)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யூரோப்பியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(III) குளோரைடு
கடோலினியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

யூரோப்பியம் (III) ஆக்சைடை ( Eu2O3) ஐதரோகுளோரிக் அமிலநீர்க் கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்தினால் அறுநீரேற்று யூரோப்பியம்(III) குளோரைடு (EuCl3•6H2O) உருவாகிறது. சூடுபடுத்துவதால் இவ்வுப்பு நீரிலி வகை உப்பைக் கொடுக்காமல் ஆக்சிகுளோரைடைத் தருகிறது. Eu2O3[1][2] அல்லது நீரேறிய யூரோப்பியம் குளோரைடில் இருந்து அமோனியம் குளோரைடு வழியாக நீரிலி வகை யூரோப்பியம்(III) குளோரைடு தயாரிக்க இயலும்[3]. இம்முறைகளில் (NH4)2[EuCl5]: உற்பத்தி செய்யப்படுகிறது.

10 NH4Cl + Eu2O3 → 2 (NH4)2[EuCl5] + 6 NH3 + 3 H2O
EuCl3·6H2O + 2 NH4Cl → (NH4)2[EuCl5] + 6 H2O

இந்த ஐங்குளோரைடு வெப்பத்தால் சிதைவடைகிறது,

(NH4)2[EuCl5] → 2 NH4Cl + EuCl3

வெப்ப முறிவு வினை (NH4)[Eu2Cl7] என்ற இடைவினைப் பொருள் வழியாக தொடர்கிறது.

வினைகள்

தொகு

மற்ற யூரோப்பியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கு யுரோப்பியம்(III) குளோரைடு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. பிணைப்பு இடமாற்ற வினை வழியாக இலித்தியம் பிசு(மும்மெத்தில்சிலில்) அமைடுடன் சேர்த்து, தொடர்புடைய உலோக பிசு(மும்மெத்தில்சிலில்)அமைடாக இதை மாற்றமுடியும்.[4] நான்கு ஐதரோ பியுரோனில் மீட்சிக்கான சிறிய இடைவெளியுடன் இவ்வினை மேற்கொள்ளப்படுகிறது. உலோக பிசு(மும்மெத்தில்சிலில்)அமைடை (Eu(N(SiMe3)2)3 ) தொடக்கப் பொருளாகக் கொண்டு மிகவும் சிக்கல் நிறைந்த அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கலாம்.

EuCl3 + 3 LiN(SiMe3)2 → Eu(N(SiMe3)2)3 + 3 LiCl

ஐதரசன் வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்தலுடன் கூடிய ஒடுக்க வினை யூரோப்பியம்(III) குளோரைடைக் கொடுக்கிறது. இது யூரோப்பியம்(II) வகை கரிம உலோகச் சேர்மங்களைத் தயாரிக்க பயன்படுகிறது.[5][6]

கட்டமைப்பு

தொகு

திண்மநிலையில் இச்சேர்மம் UCl3 நோக்குருவில் படிகமாகிறது. யூரோப்பியம் மையங்கள் ஒன்பது ஒருங்கிணைவுகளாகின்றன.

[7]

 
EuCl3 இன் இடைவெளி நிரப்பும் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. Meyer, G. (1989). "The Ammonium Chloride Route to Anhydrous Rare Earth Chlorides-The Example of YCl3". Inorganic Syntheses 25: 146–150. doi:10.1002/9780470132562.ch35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13256-2. 
  2. Edelmann, F. T.; Poremba, P. (1997). Herrmann, W. A. (ed.) (ed.). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry. Vol. VI. Stuttgart: Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-13-103021-6. {{cite book}}: |editor= has generic name (help)
  3. Taylor, M.D.; Carter, C.P.. "Preparation of anhydrous lanthanide halides, especially iodides". Journal of Inorganic and Nuclear Chemistry 24 (4): 387–391. doi:10.1016/0022-1902(62)80034-7. 
  4. Bradley, Donald C.; Ghotra, Joginder S.; Hart, F. Alan (1973). "Low co-ordination numbers in lanthanide and actinide compounds. Part I. The preparation and characterization of tris{bis(trimethylsilyl)-amido}lanthanides". Journal of the Chemical Society, Dalton Transactions (10): 1021. doi:10.1039/DT9730001021. http://pubs.rsc.org/en/content/articlelanding/1973/dt/dt9730001021. 
  5. Tilley, T. Don; Andersen, Richard A.; Spencer, Brock; Ruben, Helena; Zalkin, Allan; Templeton, David H. (1980). "Divalent lanthanide chemistry. Bis (pentamethylcyclopentadienyl) europium(II) and -ytterbium(II) derivatives: crystal structure of bis (pentamethylcyclopentadienyl) (tetrahydrofuran ytterbium(II) -hemitoluene at 176 K". Inorganic Chemistry 19 (10): 2999. doi:10.1021/ic50212a031. 
  6. Evans, William J.; Hughes, Laura A.; Hanusa, Timothy P. (1986). "Synthesis and x-ray crystal structure of bis(pentamethylcyclopentadienyl) complexes of samarium and europium: (C5Me5)2Sm and (C5Me5)2Eu". Organometallics 5 (7): 1285. doi:10.1021/om00138a001. 
  7. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_குளோரைடு&oldid=3996603" இலிருந்து மீள்விக்கப்பட்டது