மாலிப்டினம்(VI) குளோரைடு
வேதிச் சேர்மம்
மாலிப்டினம்(VI) குளோரைடு (Molybdenum(VI) chloride) என்பது MoCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் டயா காந்தப் பண்பு கொண்ட சேர்மமாக இது காணப்படுகிறது. தங்குதன்(VI) குளோரைடு கட்டமைப்பில் உள்ளது போன்ற மூலக்கூறுகள் இங்கும் எண்முக கட்டமைப்பைக் கொண்டுள்ளன [1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாலிப்டினம் எக்சாகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13706-19-9 | |
ChemSpider | 377952 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 150193 |
| |
UNII | 779I95MPQK |
பண்புகள் | |
Cl6Mo | |
வாய்ப்பாட்டு எடை | 308.65 g·mol−1 |
தோற்றம் | கருப்பு திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுமாலிப்டினம் எக்சாபுளோரைடுடன் அதிக அளவு போரான் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் மாலிப்டினம்(VI) குளோரைடு உருவாகிறது.
2 MoF6 + 6 BCl3 → MoCl6 + 6 BF2Cl
மாலிப்டினம்(V) குளோரைடுடன் ஒப்பிடுகையில் இச்சேர்மம் அறை வெப்ப நிலையில் நிலைப்புத் தன்மை அற்றதாக உள்ளது. 2 MoCl6 → [MoCl5]2 + Cl2
மேற்கோள்கள்
தொகு- ↑ Tamadon, Farhad; Seppelt, K., (2012). "The Elusive Halides VCl5, MoCl6, and ReCl6". Angewandte Chemie International Edition 52: 767-769. doi:10.1002/anie.201207552.