குளோரின் அசைடு

வேதிச் சேர்மம்

குளோரின் அசைடு (Chlorine azide) என்பது ClN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 1908 ஆம் ஆண்டில் பிரைடெரிக் ராசுசிக் என்ற செருமன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் இதனைக் கண்டறிந்தார்.[1] நிலைப்புத் தன்மையற்ற சேர்மம் என்பதற்கு பெயர்போன சேர்மம் அடர்த்தியான குளோரின் அசைடு ஆகும். எந்த வெப்பநிலையிலும் தன்னிச்சையாக வெடிக்கும் தன்மை இதற்கு உண்டு.[2]

குளோரின் அசைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரின் நைட்ரைடு; நைட்ரசன் குளோரைடு
இனங்காட்டிகள்
13973-88-1 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61708
  • [N-]=[N+]=NCl
பண்புகள்
ClN3
வாய்ப்பாட்டு எடை 77.4731 கி/மோல்
தோற்றம் மஞ்சள் ஆரஞ்சு நிற நீர்மம் அல்லது வளிமம்
உருகுநிலை −100 °C (−148 °F; 173 K)
கொதிநிலை −15 °C (5 °F; 258 K)
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் தெளிவற்றுக் கரைகிறது. நீரில் சிறிதளவு கரைகிறது.
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக உணர்திறனுடன் வெடிக்கும் இயல்புடையது
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் புளோரின் அசைடு புரோமின் அசைடு ஐதரசோயிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வெள்ளி அசைடின் மீது குளோரின் வாயுவைச் செலுத்துவதால் அல்லது சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் சோடியம் அசைடு கலந்த கரைசலில் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து குளோரின் அசைடு தயாரிக்கப்படுகிறது[3].

அமோனியாவுடன் சேர்க்கப்படும் பொழுது ஒன்று அல்லது பல வாய்ப்புள்ள மூன்று அசைனமீன்களில், NH2N3, NH(N3)2, மற்றும் N(N3)3 ஒன்றாக உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

வெடிக்கும் தன்மை

தொகு

குளோரின் அசைடு அதிக உணர்திறன் மிக்கச் சேர்மம் ஆகும். எனவே இது எளிமையாக வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. சிலசமயங்களில் ஏற்ற தூண்டுதல் ஏதுமின்றியும் வெடிக்க நேரிடலாம். எனவே இதை வணிகரீதியாக உபயோகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் முதலில் கரைசலாக நீர்த்துப் போகச் செய்த பின்னரே பயன்படுத்த இயலும். 1,3- பியூட்டா டையீன், ஈத்தேன், எத்தீன், மீத்தேன், புரொப்பேன், பாசுபரசு, வெள்ளி அசைடு, சோடியம் முதலியனவற்றுடன் வினைபுரியும் போது குளோரின் அசைடு வெடிக்கும் இயல்புடனேயே வினைப்படுகிறது. அமிலங்களுடன் வினைபுரிய நேர்ந்தால் குளோரின் அசைடு சிதைவடைந்து நச்சு மற்றும் அரிக்கும் தன்மையுள்ள வாயுவான ஐதரசன் குளோரைடு வாயுவை வெளியிடுகிறது.[4]

இடப்பெயர்ச்சி முறைப்படுத்தல்

தொகு

குளோரின் அசைடை கப்பல் போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதை அமெரிக்க போக்குவரத்துத் துறை கட்டுப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Frierson, W. J.; Browne, A. W. (1943). "Chlorine Azide. II. Interaction of Chlorine Azide and Silver Azide. Azino Silver Chloride, N3AgCl". Journal of the American Chemical Society 65 (9): 1698–1700. doi:10.1021/ja01249a013. 
  2. Frierson, W. J.; Kronrad, J.; Browne, A. W. (1943). "Chlorine Azide, ClN3. I.". Journal of the American Chemical Society 65 (9): 1696–1698. doi:10.1021/ja01249a012. 
  3. Raschig, F. (1908). "Über Chlorazid N3Cl". Berichte der Deutschen Chemischen Gesellschaft 41 (3): 4194–4195. doi:10.1002/cber.190804103130. 
  4. பப்கெம் 61708

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரின்_அசைடு&oldid=3945580" இலிருந்து மீள்விக்கப்பட்டது