இண்டியம்(II) குளோரைடு
இண்டியம்(II) குளோரைடு (Indium(II) chloride) என்பது InCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகும்.[1][2][3] இண்டியம்(II) குளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிகிறது.[4] அறியப்பட்ட மூன்று இண்டியம் குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இண்டியம் இருகுளோரைடு, இருகுளோரோயிண்டியம்
| |
இனங்காட்டிகள் | |
13465-11-7 | |
EC number | 627-209-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 139207 |
| |
பண்புகள் | |
Cl2In | |
வாய்ப்பாட்டு எடை | 185.72 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 3.46 கி/செ.மீ3 |
உருகுநிலை | 570 °C (1,058 °F; 843 K) |
தண்ணீருடன் வினை புரியும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302, P352, P305, P351, P338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2000 பாகை செல்சியசு வெப்பநிலையில் இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் சேர்ந்து வினைபுரியச் செய்தால் இண்டியம்(II) குளோரைடு உருவாகிறது.
- In + 2HCl → InCl2 + H2
இயற்பியல் பண்புகள்
தொகுஇண்டியம்(II) குளோரைடு a = 0.964 நானோமீட்டர், b = 1.054 நானோமீட்டர், c = 0.685 நானோமீட்டர், Z = 8. என்ற அளவுருக்களுடன் சாய்சதுர வடிவத்தில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.
மூலக்கூறுகள் இருபடிகளாகவும் [InCl4] கட்டமைப்பையும் கொண்டுள்ளன.
வேதிப் பண்புகள்
தொகுஇண்டியம்(II) குளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[5]
- தண்ணீர் விகிகதச்சமமற்ற வினையை ஊக்குவிக்கிறது:
- 3InCl2 → 2InCl3 + In
- 2InCl2 → InCl3 + InCl
இண்டியம்(II) குளோரைடு சூடுபடுத்தினால் ஆக்சிசனுடன் வினைபுரிகிறது:
- 4InCl2 + O2 → 2InOCl + 2InCl3
மேற்கோள்கள்
தொகு- ↑ Kowalik, Patrycja; Bujak, Piotr; Penkala, Mateusz; Maroń, Anna M.; Ostrowski, Andrzej; Kmita, Angelika; Gajewska, Marta; Lisowski, Wojciech et al. (25 January 2022). "Indium(II) Chloride as a Precursor in the Synthesis of Ternary (Ag–In–S) and Quaternary (Ag–In–Zn–S) Nanocrystals" (in en). Chemistry of Materials 34 (2): 809–825. doi:10.1021/acs.chemmater.1c03800. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. பப்மெட்:35095188.
- ↑ "Indium(II) chloride". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
- ↑ "Indium(II) Chloride". American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
- ↑ "Indium(II) chloride (CAS 13465-11-7)". scbt.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
- ↑ Haynes, William M. (22 June 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.