சிர்க்கோனியம்(III) குளோரைடு

சிர்க்கோனியம்(III) குளோரைடு (Zirconium(III) chloride) என்பது ZrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். கருநீல நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் காற்றில் அதிக உணர்திறனுடன் வினைபுரிகிறது.

சிர்க்கோனியம்(III) குளோரைடு
Zirconium(III) Chloride
3D model of zirconium(III) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
10241-03-9 Y
ChemSpider 127679 N
InChI
 • InChI=1S/3ClH.Zr/h3*1H;/q;;;+3/p-3 N
  Key: PFXYQVJESZAMSV-UHFFFAOYSA-K N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 144719
 • Cl[Zr](Cl)Cl
பண்புகள்
Cl3Zr
வாய்ப்பாட்டு எடை 197.57 g·mol−1
தோற்றம் Blue-black crystals
அடர்த்தி 3.05 கி/செ.மீ3[1]
உருகுநிலை 627 °C (1,161 °F; 900 K)
760 மி.மீபாதரசம் இல்[1]
வினைபுரியும்[1]
கரைதிறன் பீனைல், CS2 களில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP6[2]
புறவெளித் தொகுதி P63/mcm, No. 193[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−714.21 கியூ/மோல்l[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
145.79 யூ/மோல்·கெ[3]
வெப்பக் கொண்மை, C 96.21 யூ/மோல்·கெ[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

சிர்க்கோனியம் நாற்குளோரைடை அலுமினியம் சேர்த்து குறைத்தல் வழியாக சிர்க்கோனியம்(III) குளோரைடு தயாரிக்கப்பட்டது. மாசு கலந்த இச்சேர்மத்தை ஓட்டோ ரஃப் மற்றும் வால்சுடீன் ஆகியோர் தயாரித்தனர்.[4] அடுத்து அலுமினியம் பயன்படுத்துவதால் உண்டாகும் மாசுக்கள் பிரச்சினை, ஒடுக்க வினைக்கு சிர்க்கோனியம் உலோகத்தைப் பயன்படுத்துவதால் நீக்கப்பட்டது.[5]

Zr + 3 ZrCl4 → 4 ZrCl3

அலுமினியத்தை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் சேர்த்து ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தினால், வினையில் தொடர்ச்சியாக குளோரோவலுமினேட்டுகள் உருவாகின்றன.உதாரணமாக[Zr(AlCl4)2(AlCl4)2] and Zr(AlCl4)3.[6]

சிர்க்கோனியம் முக்குளோரைடு போன்ற மூவாலைடுகள் ஒப்பீட்டளவில் எளிதில் ஆவியாவதில்லை. இதனால் வாயுநிலை ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்ப்பதால் இம்மாசுச் சீர்கேட்டை தவிர்க்கலாம். உதாரணமாக, சிர்க்கோனியம் முக்குளோரைடை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் ஐதரசன் வாயுவைச் சேர்ப்பதன் மூலம் ஒடுக்க வினையில் தயாரிக்க முடியும்.[7]

ZrCl4 + ½ H2 → ZrCl3 + HCl

கட்டமைப்பு தொகு

சில சிர்க்கோனியம் ஆலைடுகள் (ZrCl3, ZrBr3, and ZrI3) HfI3 சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே மாதிரியான இடக்குழு (P63 / MCM) மற்றும் அலகில் 2 மூலக்கூறு அறுங்கோண அமைப்பையும் பெற்றுள்ளன. சிர்க்கோனியம் முக்குளோரைடின் காந்த ஏற்புத்திறன் ஒவ்வொரு Zr(III) மையத்தின் மீதும் இணையில்லா எலக்ட்ரான்களின் உலோக - உலோக இடைவினைகளை பரிந்துரைக்கிறது. ZrCl3 இன் காந்த திருப்புத் திறன் மதிப்பு (0.4 போர் மக்னட்டான்) உலோக ஆர்பிட்டால்களின் கணிசமான மேற்படிதலைக் குறிக்கிறது[2]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
 2. 2.0 2.1 2.2 Douglas, Bodie E.; Ho, Shih-Ming (2007). Structure and Chemistry of Crystalline Solids. New York: Springer Science+Business Media, Inc. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-26147-8.
 3. 3.0 3.1 3.2 Zirconium chloride in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-06-23)
 4. Ruff, Otto; Wallstein, Richard (1923). "Reduktion anorganischer Halogenide III.1) Die Reduktion des Zirkontetrachlorids". Zeitschrift für anorganische und allgemeine Chemie 128: 96. doi:10.1002/zaac.19231280110. 
 5. Hoffman, David M.; Lee, Samkeun (1992). "Synthesis of pyridine complexes of zirconium(III) chloride and the apparent oxidation to zirconium(IV) by a nitrile". Inorganic Chemistry 31 (13): 2675. doi:10.1021/ic00039a002. 
 6. Larsen, E. M.; Moyer, James W.; Gil-Arnao, Francisco.; Camp, Michael J. (1974). "Synthesis of crystalline zirconium trihalides by reduction of tetrahalides in molten aluminum halides. Nonreduction of hafnium". Inorganic Chemistry 13 (3): 574. doi:10.1021/ic50133a015. 
 7. Newnham, I. E.; Watts, J. A. (1960). "The Preparation of the Anhydrous Zirconium Trihalides". Journal of the American Chemical Society 82 (9): 2113. doi:10.1021/ja01494a006.