செருமேனியம் ஓராக்சைடு

வேதிச்சேர்மம்

செருமேனியம் ஓராக்சைடு (Germanium monoxide) என்பது , GeO மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் தனிச்சிறப்புகள் நன்கு விவரிக்கப்படவில்லை[1]. செருமேனியம் ஈராக்சைடுடன் செருமேனியம் உலோகத்தை 1000 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் மஞ்சள் நிறப் பதங்கமாக செருமேனியம் ஓராக்சைடு உருவாகிறது. மஞ்சள் பதங்கத்தை 650 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் பழுப்பு நிறம் கொண்ட செருமேனியம் ஓராக்சைடாக மாறுகிறது[1]. ஈரியல்பு ஆக்சைடான இது அமிலங்களில் கரைந்து செருமேனியம்(II) உப்புகளையும் காரங்களில் கரைந்து Ge(OH)3− அயனிகள் கொண்ட மூவைதராக்சோசெருமேனேட்டுகள் அல்லது செருமேனைட்டுகள் உருவாகின்றன.[2]

செருமேனியம் ஓராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(II) ஆக்சைடு
வேறு பெயர்கள்
செருமேனசு ஆக்சைடு
செருமேனசு அமிலம்
இனங்காட்டிகள்
20619-16-3 Y
பப்கெம் 6327639
பண்புகள்
GeO
வாய்ப்பாட்டு எடை 88.6394 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வேதிப்பண்புகள்

தொகு

செருமேனியம் ஆக்சைடு Ge மற்றும் GeO2 ஆகச் சிதைவடைகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. Shriver and Atkins. Inorganic Chemistry (5th Edition). W. H. Freeman and Company, New York, 2010, pp 365.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்_ஓராக்சைடு&oldid=2697054" இலிருந்து மீள்விக்கப்பட்டது