டெட்ரோயிட் ஆறு

டெட்ரோயிட் ஆறு (Detroit River) என்பது பேரேரிகள் தொகுதியில் உள்ள 32 மைல்கள் நீளமும், 0.5 - 2.5 மைல்கள் (1-4 கிமீ) அகலமும் கொண்ட ஆறு ஆகும். இதன் பெயர் நீரிணை ஆறு (Rivière du Détroit) என்னும் பிரெஞ்சுப் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்த ஆறு, சென். கிளையர் ஏரியையும் (St. Clair ), ஈரி ஏரியையும் (Lake Erie) இணைப்பதன் காரணமாக இப் பிரெஞ்சுப் பெயர் ஏற்பட்டது. ஆனாலும் வரைவிலக்கணப்படி இது ஒரு நீரிணை அல்ல. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைக்கோடு இந்த ஆற்றினூடாக நீளவாட்டில் செல்கிறது. இது கடல்மட்டத்தில் இருந்து 579 அடி (175 மீட்டர்) உயரத்தில் உள்ளது.

லாண்ட்சட் செயற்கைக்கோள் படம். சென். கிளையர் ஏரி, சென். கிளையர் ஆறு என்பவை வடக்கில் ஹூரோனுடனும், டெட்ரொயிட் ஆறு அதனை கிழக்கில் ஈரி ஏரியுடன் இணைப்பதையும் காட்டுகின்றது.
மிச்சிகனிலுள்ள குரொஸ்சே இலே நகரத்திலிருந்து டெட்ரோயிட் ஆற்றின் தோற்றம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ரோயிட்_ஆறு&oldid=3260155" இலிருந்து மீள்விக்கப்பட்டது