டெனாலி தேசியப் பூங்கா

ஆலாசுக்காவின் தேசியப் பூங்கா

டெனாலி தேசிய பூங்கா என்பது ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். டெனாலி தேசிய பூங்கா ஜார்ஜ் பார்க்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் அன்கொரஜிற்கு 250 மைல் வடக்கே உள்ளது. இந்த தேசிய பூங்காவின் பரப்பளவு சுமார் 9500 சதுர மைல்கள் (6 மில்லியன் ஏக்கர்). இந்தப் பகுதி ஆர்க்டிக் வட்டத்தின் அருகில் இருக்கும் ஓர் உறைபனிப் பிரதேசமாகும். இங்கு மிகவும் குளிராக இருந்தாலும் கோடை காலத்தில், வெப்பம் மிதமாக இருக்கும். டெனாலி பூங்காவின் நுழைவு கட்டணம் 50 டாலர் ஆகும். பெரும்பாலான உணவு சேவைகள் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். டெனாலி பூங்காவில் 650 மேற்பட்ட வகையான பூக்கக் கூடிய செடி இனங்கள் உள்ளன. இந்த பூங்காவில் 20320 அடி உயரமான மவுண்ட் மெக் கின்லி மலை உள்ளது. மெக்கின்லி மலை வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். இம்மலையைச் சுற்றியே டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

டெனாலி தேசியப் பூங்கா
Denali National Park and Preserve
டெனாலி (மெக்கின்லி மலை) வட அமெரிக்காவில் உயரமிக்க சிகரம்
அமைவிடம்டெனாலி புரோவ், மடன்சுகா சுசிட்னா புரோவ், அலாஸ்கா, ஐக்கிய அமெரிக்கா
அருகாமை நகரம்கீலி
ஆள்கூறுகள்63°26′N 150°19′W / 63.43°N 150.32°W / 63.43; -150.32
பரப்பளவு4,740,911 ஏக்கர்கள் (19,185.79 km2) (பூங்கா) and 1,304,242 ஏக்கர்கள் (5,278.08 km2) (பாதுகாக்கப்பட்ட பகுதி) [1]
நிறுவப்பட்டதுபெப்ரவரி 26, 1917
வருகையாளர்கள்392,844 (in 2012)[2]
நிருவாக அமைப்புதேசிய பூங்கா சேவை

உசாத்துணை

தொகு
  1. "Listing of acreage as of December 31, 2012". Land Resource Division, National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
  2. "NPS Annual Recreation Visits Report". National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனாலி_தேசியப்_பூங்கா&oldid=4114173" இலிருந்து மீள்விக்கப்பட்டது