டெய்ட்ரே கிரிஸ்வோல்ட்

அமெரிக்க அரசியல்வாதி

டெய்ட்ரே கிரிஸ்வோல்ட் (Deirdre Griswold) என்பவர் அமெரிக்க கம்யூனிச அரசியல் செயற்பாட்டாளராகவும், தொழிலாளர் உலகக் கட்சியின் செய்தித்தாளான தொழிலாளர் உலகத்தின் ஆசிரியராகவும், அமெரிக்க ஜனாதிபதி பதவியின் முன்னாள் வேட்பாளராகவும் உள்ளார். இவர் 1980ல் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தொழிலாளர் உலகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். கேவ்ரியல் ஹோம்ஸ் என்பவர் அவருக்குத் துணையாக இருந்தார்.

1980 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக போட்டியிடும் போது கிரிஸ்வோல்ட்.

கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வின்சென்ட் கோப்லாண்ட் என்பவர் இவரது தந்தையாவார். .[1]. அவரது தாயார் எலிசபெத் ரோஸ் கோப்லாண்ட் மற்றும் தந்தைவழி அத்தை சிந்தியா கோக்ரான் ஆகியோரும் பொதுவுடைமைவாதிகள் ஆவர். அவர் ஆண்டி ஸ்டாப் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். [2] “தொழிலாளர் உலகம்” இதழின் ஆசிரியராகப் பல தசாப்தங்கள் பொறுப்பு வகித்தார். [3]

2004ல் ஜனாதிபதி பதவிக்கு மூன்றாம் தரப்பு வேட்பாளருக்கு துணையாக கிரிஸ்வோல்ட் இருந்தார். பிப்ரவரி 12, 2018 அன்று, கிரிஸ்வோல்ட் "டக்கர் கார்ல்சன் இன்றிரவு" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் அவர் வட கொரியா அரசை ஆதரித்துப் பேசினார். [4]

நூலியல்

தொகு
  • சீனா: தொழிலாளர் உலகத்தின் பக்கங்களிலிருந்து (1972) (சாம் மார்சி மற்றும் நவோமி கோஹனுடன்)
  • எத்தியோப்பியன் புரட்சி மற்றும் யு.எஸ். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் (1978)
  • நேரில் பார்த்தவர் எத்தியோப்பியா: தொடரும் புரட்சி (1979)
  • இந்தோனேசியா: தி பிளட்பத் தட் வாஸ் (1975)
  • இந்தோனேசியா: நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய குற்றம் (1978)

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.nytimes.com/1993/06/10/obituaries/vincent-copeland-77-is-dead-led-anti-war-protests-in-1960-s.html
  2. William Yardley (September 14, 2014). "Andy Stapp, Who Tried to Unionize the Military, Dies at 70". The New York Times. பார்க்கப்பட்ட நாள் September 28, 2014.
  3. Hafetz, David (May 2, 2004). "CITYPEOPLE; Last of the True Believers". The New York Times. https://www.nytimes.com/2004/05/02/nyregion/citypeople-last-of-the-true-believers.html. பார்த்த நாள்: 13 February 2018. 
  4. Baragona, Justin (February 12, 2018). "https://www.mediaite.com/tv/tucker-carlson-and-north-korea-sympathizer-go-at-it-in-insanely-off-the-rails-segment/". Mediaite. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்ட்ரே_கிரிஸ்வோல்ட்&oldid=3175980" இலிருந்து மீள்விக்கப்பட்டது