டெல்டா கடற்கரை
டெல்டா கடற்கரை (Delta Beach) கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கோடி பெங்கரே என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. கோடி பெங்க்ரே கடற்கரை என்றும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது. சுவர்ணா நதி அரபிக்கடலை சந்திக்கும் முகத்துவாரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.[1]
டெல்டா கடற்கரை | |
---|---|
கோடி பெங்கரே | |
ஆள்கூறுகள்: 13°26′59″N 74°41′42″E / 13.4496834°N 74.695133°E | |
Country | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் | கர்நாடகா |
இந்தியாவின் மாவட்டங்களின் பட்டியல் | உடுப்பி |
நகரம் | உடுப்பி |
மொழிகள் | |
• அதிகாரி | துளு, கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (ஒ.ச.நே) |
வாகனப் பதிவு | கேஏ 20 |
இணையதளம் | karnataka |
உள்ளூரில் ""குத்ரு"" என்று அழைக்கப்படும் சிறிய தீவுகள் டெல்டா கடற்கரையின் சுற்றுப்புறத்தில் உள்ளன . டெல்டா கடற்கரையில் மீன்வளத்துக்கான சிறிய துறைமுகம் ஒன்று உள்ளது.
போக்குவரத்து
தொகுடெல்டா கடற்கரை உடுப்பியிலிருந்து கோடி பெங்கரே ஊட்டு சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உடுப்பியில் இருந்து நகரப் பேருந்துகள் கோடி பெங்ரே, கெம்மானு மற்றும் ஊட்டு ஆகிய இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்கின்றன. டெல்டா கடற்கரை மால்பே கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கள் கடை
தொகுபெங்கரேயில் பல குளிரூட்டப்பட்ட கள் விற்பனைக் கடைகள் உள்ளன. [2] இப்பகுதி அங்கு கிடைக்கும் புத்தம்புதிய கடல் உணவுகளுக்கும் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A travel guide to coastal Karnataka". 20 October 2018.
- ↑ "Delta Beach, ahoy!".