டெவோன் அருவி

டெவோன் அருவி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை - தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாரான டெவன் ஆற்றில் அமைந்துள்ளது.[2] மொத்தம் 97 மீட்டர் (318 அடி) உயரத்தை பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - பதுளை பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கு அருகாமையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. நீர் வீழ்ச்சியில் உச்சியை நாவலப்பிட்டி- தலவாக்கலை பெருந்தெருவின் மூலம் இலகுவாக அடையலாம் மேலும் உச்சியின் அருகே மக்கள் குடியேற்றம் ஒன்றும் உள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் பலதற்கொலைகள் இந்நீர்வீழ்ச்சியில் நடைபெற்றுள்ளன.[3] The elevation of Devon Falls is 1,140 m (3,740 அடி) above sea level.[4][5][6]

டெவோன் அருவி
Map
அமைவிடம்இலங்கை மத்திய மாகாணம்
வகைஅடுக்கு அருவி[1]
ஏற்றம்1187 மீட்டர்
மொத்த உயரம்97 மீட்டர் (318 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிடெவோன் ஆறு (மகாவலி கங்கை)
அருவி (2018)

மேற்கோள்கள்

தொகு
  1. "Devon Falls". www.worldwaterfallsdatabase.com. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.
  2. "Catching a Glimpse of the Impressive Devon Waterfall". The Daily Mirror. 1 September 2014. http://www.dailymirror.lk/expo-sri-lanka/catching-a-glimpse-of-the-impressive-devon-waterfall/257-56957. 
  3. Senanayake 2004: 1
  4. Abhayawardena 2004: 2
  5. Senanayake, Chanaka (2004). Sri Lankawe Diya Eli. Sooriya Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8892-06-0.
  6. Abhayawardhana, H.A.P. (2004). Kandurata Praveniya. Sri Lanka Central Bank. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-575-092-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவோன்_அருவி&oldid=3523743" இலிருந்து மீள்விக்கப்பட்டது