டேனியல் தார்தா

பெல்ஜிய சதுரங்க வீரர்

டேனியல் தார்தா (Daniel Dardha) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்ட் மாசுட்டர் ஆவார். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் தனது 13 வயதில் பெல்ஜிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். அந்நாட்டில் இவ்வெற்றியைப் பெற்ற இளைய வீரர் என்ற சிறப்புக்கு உரியவரானார்.[2] 45 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் பெல்ஜியம் நாட்டின் சார்பாகப் போட்டியிடுகிறார்.

டேனியல் தார்தா
நாடுபெல்ஜியம்
பிறப்பு1 அக்டோபர் 2005[1]
மோர்ட்செல், பெல்ஜியம்[1]
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2021)
பிடே தரவுகோள்2533 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2650 (மே 2024)
உச்சத் தரவரிசைஎண். 86 (மே 2024)

சதுரங்கப் போட்டிகள்

தொகு

2017 ஆம் ஆண்டில், 12 வயதில், இவர் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான விரைவு சதுரங்கப் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[3] பெல்ஜிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்ற பின்னர் சிறிது காலத்திலேயே 2019 ஆம் ஆண்டில் இவர் தனது பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றார்.[2] இரண்டாவது முறையாக பெல்ஜிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு 2021 ஆம் ஆண்டில் தனது கிராண்டுமாசுட்டர் பட்டத்தைப் பெற்றார், 15 ஆவது வயதில் பெல்ஜியம் நாட்டின் மிக இளைய கிராண்ட்மாசுட்டராக ஆனார்.[4]

2022 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பெல்ஜியம் நாட்டு சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

16 வயதில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்கப்போட்டியில் அல்பேனிய வெற்றியாளர் பட்டத்தை வென்ற அர்பன் தார்தா இவருடைய தந்தையாவார். டேனியலின் தந்தை ஒரு பிடே மாசுட்டரும் ஆவார். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, டேனியல் இடைவிடாமல் இவான் சோகோலோவ் என்பவரால் பயிற்றுவிக்கப்படுகிறார். டேனியல் தார்தாவின் தாத்தா பார்தில் தார்தா அல்பேனியா பெராட்டில் உள்ள தோமோரி சதுரங்கக் கழகத்திற்கும் அவரது மகனுக்கும் பயிற்சியளித்தார். 82 வயதில், இன்னும் கூட இணையவழி சதுரங்கத்தில் தீவிரமாக இருக்கிறார். [2]அவரது குடும்பப் பெயருக்கு ஆங்கிலத்தில் பேரிக்காய் என்று பொருளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "FIDE Title Application (IM)" (PDF).
  2. 2.0 2.1 2.2 "Daniel Dardha, a Belgian champion at 13!". Chess News (in ஆங்கிலம்). 2019-08-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  3. "Daniel Dardha Wereldkampioen Snelschaken bij -14 jarige - Schaakkring Deurne-Zuid". www.schaakkringdeurne-zuid.net. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  4. Times, The Brussels. "15-year-old is youngest Belgian Grandmaster in chess world". www.brusselstimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  5. Sergio (20 August 2022). "Daniel Dardha wins the Belgian Chess Championship, crosses 2600 ELO – Chessdom". www.chessdom.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_தார்தா&oldid=4088409" இலிருந்து மீள்விக்கப்பட்டது