டேனியல் மின்கலம்
டேனியல் மின்கலம் (Daniell cell) 1836 ஆம் ஆண்டில் ஜான் ஃபிரடெரிக் டேனியல், எனும் பிரித்தானிய வேதியியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட ஒரு மின்வேதியியல் மின்கல வகையைச் சார்ந்தது. இம்மின்கலத்தில் தாமிரப் பாத்திரத்தில் தெவிட்டிய மயில் துத்தம் கரைசல் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நுண்துளைப் பாண்டம் ஒன்றினுள் நீர்த்த சல்பூரிக் அமிலத்தில் துத்தநாகத் தண்டு வைக்கப்பட்டிருக்கும். நுண்துளைப்பாண்டம் மயில் துத்தம் கரைசலினுள் வைக்கப்பட்டிருக்கும். துத்தநாகத்தண்டு சல்பூரிக் அமிலத்துடம் வினைபுரிந்து Zn++ அயனிகளையும் இரு எலக்ட்ரான்களையும் தரும். Zn++ அயனிகள் நுண்துளைப் பாண்டத்தில் உள்ள துளைகளின் வழியே சென்று மயில் துத்தம் கரைசலுடன் வினைபுரிந்து Cu++ அயனிகளை உருவாக்கும். இந்த Cu++ அயனிகள் நேர்மின்வாயான தாமிரப்பாத்திரத்தில் படியும். டேனியல் மின்கலம் மின்சுற்றில் இணைக்கப்படும்போது துத்தநாகத்தண்டிலிருந்து இரு எலக்ட்ரான்கள் சுற்றின் வழியே சென்று தாமிரத்தில் உள்ள தாமிர அயனிகளை நடுநிலையாக்கும். இதனால் தாமிரத்தில் இருந்து துத்தநாகத்திற்கு மின்சாரம் பாயும். டேனியல் மின்கலம் 1.08 வோ மின்னியக்கு விசையைத்தரும்.[1][2] நிகழ்கால வரையரைப்படி, டேனியல் மின்கலத்தின் செந்தர மின்னிலை 25° செ வெப்பநிலையில் 1.10 வோ ஆகும்.[3] இக்கலத்தில் நிகழும் மொத்த வினை ஓர் ஏற்ற ஒடுக்க வினையாகும். டேனியல் மின்கலம் வோல்டாயிக் மின்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Borvon, Gérard (September 10, 2012). "History of the electrical units". Association S-EAU-S.
- ↑ Hamer, Walter J. (January 15, 1965). Standard Cells: Their Construction, Maintenance, and Characteristics (PDF). National Bureau of Standards Monograph #84. US National Bureau of Standards.
- ↑ Spencer, James N.; Bodner, George M.; Rickard, Lyman H. (2010). Chemistry: Structure and Dynamics (Fifth Edition). John Wiley & Sons. p. 564. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470587119.
மேலும் படிக்க
தொகு- Saslow, Wayne M. (1999), "Voltaic cells for physicists: Two surface pumps and an internal resistance", American Journal of Physics, 67 (7): 574, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1119/1.19327
- Lester, James C.; Vicari, Rosa Maria; Paraguaçu, Fábio (2004), Lester, James C.; Vicari, Rosa Maria; Paraguaçu, Fábio (eds.), A Qualitative Model of Daniell Cell for Chemical Education, Lecture Notes in Computer Science, vol. 3220, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/b100137, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-22948-3
வெளியிணைப்புகள்
தொகு- Daniel Cell Experiment பரணிடப்பட்டது 2006-08-25 at the வந்தவழி இயந்திரம்